யோக நித்திரையில் பெருமாள் இருப்பது ஏன்?

இந்த நித்திரையை “அறிதுயில்’ என்பர். கண்ணை மூடியிருந்தாலும் எல்லாம் அறிபவர் அவர். மனிதர்கள் உறங்கும்போது, கனவு காண்கிறார்கள். கனவில் நமக்குத் தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் எல்லாம் வருகிறார்கள். அவர்களுடன் கனவு காண்பவர் உரையாடுவார், விளையாடுவார்…இன்னும் அன்றாட வாழ்வில் என்னென்ன செயல்கள் உண்டோ, அத்தனையும் செய்கிறார்.
விழித்துவிட்டால் அத்தனையும் கற்பனை போல கலைந்து விடுகிறது. விஷ்ணுவும், கற்பனா சிருஷ்டியாகவே உலகையும், உயிர்களையும் படைக்கிறார். இதனால் தான் கண்மூடியிருப்பது போல நடிக்கிறார். இதற்கு “யோக நித்திரை’ என்றும் பெயர். மனிதனின் சாதாரணமான தூக்கம் போல் அல்லாமல், இதை ஒரு தவநிலை என்றும் சொல்லலாம். “அரிதுயில்’ என்று சொன்னாலும் தவறல்ல. விஷ்ணுவை “ஹரி’ என்கிறோம். இதை தமிழில் “அரி’ என்பர். அரியின் தூக்கம் அரிதுயில் ஆகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here