டிங்கி பதிவுகள் பினாங்கில் அதிகம்

பினாங்கு மாநிலம் இந்த ஆண்டு ஜூன் 14 முதல் ஜூன் 20 வரை 31 டிங்கி நோயாளிகளைப் பதிவு செய்திருக்கிறது. முந்தைய வாரத்துடன் ஒப்பிடும்போது எட்டு வழக்குகள் கூடுதலாகும்.

ஜூன் 7 முதல் ஜூன் 13 வரை பதிவான 23 வழக்குகளில் இருந்து இது 34.78 விழுக்காடு அதிகரித்துள்ளது என்று மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட அண்மைய அறிக்கையில் அறியமுடிந்தது.

திமூர் லாட் மாவட்டத்தின் தாமன் ஆயர் ஈத்தாம் பகுதியில் ஓரிடத்திலும், டேசா பைடூரியில் ஓர் இடத்திலும் ஆகிய  எட்டு இடங்களில் டிங்கி  கண்டுபிடிக்கப்பட்டன.

கம்போங் சுலாப் சோலோக் இலவச பள்ளி, ஜாலான் லிம் லீன் டெங், மேடான் அங்சானா, ஜாலான் அங்சானா, ஆல் சீசன் பார்க் காண்டோ ஆகிய இடங்கள் என ஆறு கட்டுப்படுத்தப்பட்ட இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன  என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், இந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூன் 20 வரையிலான காலப்பகுதியில் மாநிலத்தில் டிங்கி நோயாளிகளின் மொத்த எண்ணிக்கை 441 ஆகும். கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் 2,969 வழக்குகள் பதிவாகியிருந்தன.

கடந்த ஆண்டு இதே காலப்பகுதியில் பதிவு செய்யப்பட்ட எட்டு இறப்புகளுடன் ஒப்பிடும்போது , ஜனவரி முதல் ஜூன் 20 வரை ஒரு மரணம் மட்டுமே பதிவாகியுள்ளது.

இதற்கிடையில், இந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூன் 20 வரை மொத்தம் 297 சிக்குன்குனியா வழக்குகளும் பதிவாகியுள்ளன.

திமூர் லாவுட் மாவட்டத்தின் பிளாட் பாடாங் தெம்பாக், லோராங் செம்பாடான் , தாமான் ஆயர் ஈத்தாம் ஆகிய மூன்று  இடங்களிலும்  கண்டறியப்பட்டுள்ளன.

23 கட்டுப்படுத்தப்பட்ட இடங்களும் அடையாளம் காணப்பட்டுள்ளன, அவற்றில் 22 திமூர் லாவுட் மாவட்டத்திலும், ஒன்று சாங்காட் சுங்கை அரா பாராட் பகுதியிலும் உள்ளன.

டிங்கி, சிக்குன்குனியா பரவுவதைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டும் வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here