நேரடியாக ஓடிடி-யில் வெளியாகும் யோகிபாபு படம்..

யோகிபாபு நாயகனாக நடித்துள்ள படம் `காக்டெய்ல்’. அறிமுக இயக்குனர் முருகன் இயக்கியுள்ளார். இதில் யோகிபாபுவுடன், சாயாஜி ஷிண்டே நகைச்சுவை கலந்த இன்ஸ்பெக்டர் வேடத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் மனோபாலா, மைம்கோபி, சாமிநாதன், யோகி பாபுவின் நணபர்களாக ரமேஷ், மிதுன், டி.வி. புகழ் பாலா குரேஷி ஆகியோரும் நடித்துள்ளார்கள். `காக்டெயில்’ என்ற பறவையும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளது.

விஜயகாந்த் மகன் சண்முகபாண்டியன் நடித்த `மதுரை வீரன்’ படத்தின் இயக்குனரும், லிசா, டேனி ஆகிய படங்களின் தயாரிப்பாளருமான பிரபல ஒளிப்பதிவாளர் பி.ஜி.முத்தையா, இந்த படத்தை தயாரித்துள்ளார்.

இப்படத்தை மார்ச் 20ஆம் தேதி வெளியிட திட்டமிட்டு இருந்தனர். கொரோனா ஊரடங்கு காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டதால் படத்தின் வெளியீடு தள்ளிப்போனது. இந்நிலையில், இப்படத்தை திரையரங்குக்கு பதிலாக நேரடியாக ஓடிடி-யில் வெளியிட உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி இப்படம் வருகிற ஜூலை 10ஆம் தேதி ஜீ5 தளத்தில் வெளியாக உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here