ஈப்போ: வடக்கு-தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் 283 கிலோ மீட்டர் தென்பகுதியில் ஒரு லோரி கவிழ்ந்ததால்7 கி.மீ வரை மிக கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
பிளஸ் தனது டுவிட்டர் கணக்கில், திங்கள்கிழமை (ஜூன் 29) காலை 8.50 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது என வெளியிட்டிருந்தது. நெடுஞ்சாலையின் இடது பாதையை லோரி மறைத்துள்ளது என்றும் வாகனத்தை அகற்றும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன என்று அறியப்படுகிறது.