வதந்திகளை நம்ப வேண்டாம் !

இந்திய சினிமாவின் மிக மூத்த பின்னணி பாடகியாக அறியப்படும் எஸ்.ஜானகி (வயது 82) ஹைதராபாத்தில் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்.

இவர் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட 17 இந்திய மற்றும் வெளிநாட்டு மொழிகளில் 48,000 பாடல்களுக்கு மேல் பாடியுள்ளார். வயது மூப்பின் காரணமாக 2018ம் ஆண்டுடன் பாடல்கள் பாடுவதை ஜானகி நிறுத்திக்கொண்டார்.

இந்நிலையில் பாடகி எஸ்.ஜானகி உடல்நலக் குறைவால் மரணமடைந்து விட்டதாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் உலா வரத்தொடங்கியது.

இது தொடர்பாக எஸ்.ஜானகியின் மகனான முரளி கிருஷ்ணா கூறுகையில், தனது தாயார் உடல்நலத்துடன் இருப்பதாகவும். தவறான செய்திகளை பரப்ப வேண்டாம் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும் ஜானகி உடல்நலன் குறித்து இசையமைப்பாளர் தீனாவும் விளக்கமளித்துள்ளார். ஜானகியுடன், பாடகர் எஸ்.பி.பி தொடர்பு கொண்டு பேசியதாகவும் அப்போது ஜானகி சிரித்து சந்தோஷமாக பேசியதாகவும், எனது உடல்நலன் குறித்து இதுவரை 6 முறை வதந்தி பரவிவிட்டதாகவும் அவர் எஸ்.பி.பியிடம் பேசியதாக இசையமைப்பாளர் தீனா ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here