கடந்த 24 மணி நேரத்தில் கோவிட் 19 தொற்றுக்கு 6 பேர் இலக்காகியுள்ளனர். அவர்கள் 6 பேரும் மலேசியர்கள் என்று சுகாதார துறை அறிவித்துள்ளது.
இன்று 5 பேர் குணமாகியுள்ளனர். மொத்த பாதிப்பின் எண்ணிக்கை 8,674 ஆக பதிவாகியுள்ளது. குணமடைந்தோரின் எண்ணிக்கை 8,481 ஆக பதிவாகியிருக்கிறது.
இறந்தவர்களின் எண்ணிக்கை 121ஆகவே நீடிகிறது.
புதிதாக பாதிக்கப்பட்டவர்களில் இருவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் இருவருக்கும் சுவாச உபகரணங்கள் தேவைப் படுகின்றன.
6 பாதிப்புகளில் நான்கு பாதிப்புகள் வெளிநாட்டிலிருந்து ஏற்பட்ட தொற்றாகும். இரண்டு பாதிப்புகள் உள்நாட்டில் ஏற்பட்டதாகும் என்று சுகாதார துறை தலைமை இயக்குனர் டாக்டர் நோர் இஷாம் அப்துல்லா கூறினார்.
உள்நாட்டில் ஏற்பட்டுள்ள இரு பாதிப்புகள் கோலாலம்பூர் மற்றும் சிலாங்கூரில் ஏற்பட்டதாகும். மேலும் அந்நியர்களின் கோவிட் பாதிப்புகள் ஏதும் பதிவாகவில்லை என அவர் குறிப்பிட்டார்.