அடையாள ஆவணங்கள் இல்லை.. பெற்றோர்களை தேடும் மூன்று சகோதரிகளின் தவிப்பு !

அம்மா, அப்பா எங்கே இருக்கிங்க? எங்களை வந்து பாருங்க, உங்கள் அன்புக்காகவும் பாசத்துக்காவும் நாள்ததோறும் ஏங்கி தவிக்கிறோம், ரொம்ப மிஸ் பண்ணுறோம் என்பது மூன்று உடன் பிறந்த சகோதரிகளின் கதறும் அழும் குரல்.

இங்கு சிரம்பான் ஷக்கின பராமரிப்பு இல்லத்தில் பராமரிக்கப்பட்டு வரும் மகாலட்சுமி பாலக்கிருஷணன் (வயது 13), லோகசக்தி பாலக்கிருஷணன் (வயது 10) மற்றும் ஞானசௌந்தரியா இம்மூவரும் தங்கள் பெற்றோர்களை தேடி கண்ணீர் விடுகிறார்கள்.

இம்முவருக்கும் பிறப்பு பத்திரங்கள் உள்ளது,ஆனால் இவர்களின் பெற்றோர்கள் இல்லாததால், மூத்த சகோதரியான மகாலட்சுமி பாலக்கிருஷ்ணன் (வயது 13) என்பவருக்கு புதிய அடையாள அட்டை கிடைப்பதில் கடந்த ஆண்டு தொடங்கி தடைகள் நீடிக்கிது என கூறுகிறார் அவரை பராமரித்து வரும் திருமதி ஜெனிபர் லுகஸ்.

கடந்த 23.2.2017 அப்பிள்ளைகளின் தாயார் திருமதி லோகேஸ்வரி சுப்பையா என்பவர் அந்த 3 பிள்ளைகளை அழைத்துக் கொண்டு இங்கு தஞ்சம் புகுந்தார்கள், அப்பொழுது அந்த இளம் தாயின் வயது சுமார் 28 வயதிருக்கும் என ஜெனிபர் குறிப்பிட்டடார். அதன் பின் அப்பிள்ளைகளை தன்னிடம் ஒப்படைத்ததுவிட்டு, சென்று மீண்டும் வருவேன் என்று சொல்லி புறப்பட்டு சென்றார்.

மூன்று ஆண்டுகளை கடந்துவிட்டது ஆனால் அத்தாய் வரவில்லை, அப்பிள்ளைகளை தேடி அவர்களின் அப்பா மற்றும் உறவினர்கள் என்று எவரும் தேடி வரவில்லை. இம்முவரும் பள்ளிக்கு செல்கிறார்கள், கல்வி மற்றும் விளையாட்டுகளில் சிறந்த மாணவவர்களாக திகழ்கிறார்கள்.

இருந்தும் அடையாள அட்டை கிடைப்பதில் நீடிக்கும் தடையால் இம்மூவரின் கல்வி மற்றும் எதிர்காலம் கேள்விக்குறியாகி விடுமோ என பயமாக உள்ளது. மக்கள் ஓசையின் செய்தியை பார்த்த பின்னரவது, அப்பிள்ளைகளை பார்க்க அவர்களின் பெற்றோர்கள் அல்லது உறவினர்கள் வருவார்கள் என பெரிதும் எதிர்பார்க்கின்றோம்.

தனக்கு விபரம் தெரிந்து தனது பெற்றோர்களுடன் ஜொகூர், உலுத்திராம், கம்போங் ஒரேன் என்னுமிடத்தில் வசித்து வந்தோம். அம்மாவும், அப்பாவும் பிரிந்துவிட்டார்கள். அதன் பின் அம்மாவுடன் கிள்ளான், இறுதியாக ரவாங் ஆகிய இடங்களில் வசித்து என்கிறார் மகள் மகாலட்சுமி. இப்பிள்ளைகளின் ஏக்கத்தையும், தவிப்பையும் புரிந்துக்கொண்டு பெற்றோர்கள் இவர்களை வந்து பார்த்து செல்லுமாறு இதன்வழி ஜெனிபார் கேட்டுக்கொள்கிறார்.

அப்பெற்றோர்களை தேடி தொடர்ப்புக் கொள்ள பல முயற்சிகளை, பல்வேறு வழியில் முயற்சித்தோம், ஆனாலும் கண்டுப்பிடிக்க முடியவில்லை. ஆரம்பத்தில் பிள்ளைகளை விட்டுச் செல்லும் போது அத்தாயார் கொடுத்த சென்ற கைப்பேசி எண்களுடன் தொடர்ப்புக்கொண்டப் பொழுது, அந்த கைப்பேசி எண்ணை வேறொருவர் உபயோகித்து வருகிறார் என்பது தெரிய வந்தது.

இதன் மூலமாக அப்பிள்ளைகள் எதிர்நோக்கும் அடையான ஆவணங்கள் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வுக்காண முடியும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார். தொடர்புக்கு 011-26281973 அல்லது 011-26281974. முகவரி: SHEKINAH CARE CENTRE, 1723 TAMAN TUAN SHEIKH OFF JALAN RASAH, 70300 SEREMBAN, NEGERI SEMBILAN

– நாகேந்திரன் வேலாயுதம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here