சாம்சங் ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் லீக்கானது

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ01 கோர் ஸ்மார்ட்போன் விவரங்கள் அடிக்கடி இணையத்தில் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் இதுவரை வெளியாகி உள்ள விவரங்களின் படி புதிய ஸ்மார்ட்போன் என்ட்ரி லெவல் ஆண்ட்ராய்டு கோ ஸ்மார்ட்போனாக இருக்கும் என கூறப்படுகிறது.
தற்போதைய தகவல்களில் புதிய சாம்சங் ஸ்மார்ட்போன் விவரங்கள் வெளியாகி உள்ளது. அதன்படி கேலக்ஸி ஏ01 கோர் ஸ்மார்ட்போன் மீடியாடெக் எம்டி6739 சிப்செட், 1 ஜிபி ரேம், 16 ஜிபி இன்டெர்னல் மெமரி கொண்டிருக்கும் என்றும் 5.3 இன்ச் எல்சிடி ஸ்கிரீன் வழங்கப்படும் என தெரிகிறது.
கேலக்ஸி எம்01 கோப்புப்படம்
இத்துடன் 8 எம்பி பிரைமரி கேமரா, f/2.2, எல்இடி ஃபிளாஷ், 5 எம்பி செல்ஃபி கேமரா, f/2.4, ஆண்ட்ராய்டு 10 கோ எடிஷன் இயங்குதளம் மற்றும் 3000 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்படும் என கூறப்படுகிறது. மைக்ரோ யுஎஸ்பி போர்ட், 3.5 எம்எம் ஹெட்போன் ஜாக், மைக்ரோ எஸ்டி ஸ்லாட் மற்றும் டூயல் சிம் ஸ்லாட் வழங்கப்படும் என தெரிகிறது.
என்ட்ரி லெவல் ஸ்மார்ட்போன் என்பதால், இது கழற்றக்கூடிய பேட்டரி கொண்டிருக்கும் என தெரிகிறது. புதிய சாம்சங் ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதி மற்றும் விலை பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை. எனினும், இந்த ஸ்மார்ட்போனின் உற்பத்தி பணிகள் தொடங்கிவிட்டதாக கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here