வேகக் கட்டுப்பாட்டை இழந்த கார் ஆற்றில் பாய்ந்தது

கோலாலம்பூர் ஜாலான் கூச்சிங்கில் வேகக் கட்டுப்பாட்டை இழந்த டோயோத்தா கோரோலா ரக கார் ஒன்று ஆற்றில் பாய்ந்தது.

இன்று காலை 8.24 மணியளவில் இச்சம்பவம் குறித்து தகவல் கிடைத்தும் செந்தூல் மற்றும் ஜாலான் ஹங் துவா தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

ஆற்றில் மூழ்கி இருந்த காரில் யார் இருக்கின்றனர் என்பதை காண முதலில் தீயணைப்பு வீரர்கள் ஆற்றிற்குள் இறங்கினர். மழைக் காலத்தில் அந்த ஆற்றின் நீர் அளவு உயரமாக இருக்கும் என்பதால் காரில் உள்ளவர்களை உடனே வெளியில் கொண்டு வர முயற்சித்ததாக தீயணைப்பு அதிகாரி முகமட் அஸிஸி பின் அப்துல்லா தெரிவித்தார்.

ஆனால் காரில் யாரும் இல்லை. அக்காரில் இருந்தவர் கோலாலம்பூர் பெரிய மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார் என்பது தெரிய வந்தது.

பின்னர் ஆற்றிலிருந்து காரை வெளியில் கொண்டு வர பெரிய ஓங்கியின் உதவியுடன் தீயணைப்பு வீரர்கள் செயல்பட்டனர். மோசமாக சேதமாகியிருந்த அக்காரை வெற்றிக் கரமாக ஓங்கி மூலம் வெளியில் கொண்டு வந்தனர்.

அச்சமயத்தில் காரின் பெட்ரோல் சாலையில் ஊற்றியிருந்தது.

அவற்றை சுத்தம் செய்யும் பணியில் டிபிகேஎல் பணியாளர்களுடன் சாலை போக்குவரத்து போலீசாரும் ஈடுப்பட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here