ஈப்போ மாநகர் நட்சத்திரம், பவித்திராவுக்கு விருது

யூடியூப் அலைவரிசையில் சமையல் நிகழ்ச்சி மூலம் பிரதமர் உட்பட பலரின் பாராட்டுகளைப் பெற்ற எஸ். பவித்திரா, ஈப்போ மாநகரில் நட்சத்திரமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

ஈப்போ, மாநகர மேயர் டத்தோ ருமைஸி பஹாரின், பவித்திராவிற்கு ஈப்போ சிட்டி ஐகோன் எனப்படும் இவ்விருது வழங்கப்படும் தகவலை அறிவித்து தமது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொண்டார்.

புந்தோங்கில் பிறந்த பவித்திராவின் இந்தச் சாதனை மற்றவர்களுக்கு நல்லதோர் எடுத்துக்காட்டாக விளங்குகின்றது. ஏற்கெனவே உலகப் புகழ்பெற்ற திரைப்பட நடிகை மைக்கல் இயோவிற்கும் முன்னதாக இந்த விருது வழங்கப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த விருது வழங்கும் நிகழ்ச்சி இவ்வாண்டு ஈப்போ மாநகர் மன்ற தினத்தில் நடத்தப்படவிருந்தது. ஆனால், நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமல்படுத்தப்பட்டதால் அடுத்தாண்டு மே 7ஆம் தேதியன்று அவர்களுக்கு இந்த விருது அதிகாரப்பூர்வமாக வழங்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here