கோலப்பிலா யு.ஐ.டி.எம் வளாகத்தில் கருஞ்சிறுத்தை நடமாட்டம்

கோலப்பிலா யுஐடிஎம் பல்கலைக்கழக  வளாகத்தில் கருஞ்சிறுத்தை ஒன்றின் நடமாட்டம் இங்குள்ள மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

கருஞ்சிறுத்தையின் நடமாட்டம் இருப்பதை பல்கலைக்கழக நிர்வாகமு ம் இன்று உறுதிப்படுத்தியது.

புதன்கிழமை (ஜூலை 22) இரவு 7 மணியளவில் கறுஞ்சிறுத்தை ஒன்று வளாகத்தில் நடமாடிக் கொண்டிருப்பதை பல்கலைக்கழக ஊழியர் ஒருவர் படம் எடுத்திருந்தார் என பல்கலைக்கழகத்தின் தலைமை இயக்குநர் மும்தாஸ் கூறினார்.

போட்டோஸோப் நவீன உத்தி முலம் கருஞ்சிறுத்தை இணைக்கப்பட்டிருப்பதாக முதலில் நம்பப்பட்டது.

நாங்கள் உடனடியாக வனவிலங்கு  துறையுடன் தொடர்பு கொண்டோம். அவர்கள் இங்கு வந்தபோது சிறுத்தையின் நடமாட்டம் இல்லை.

எனினும் சிறுத்தை வந்து போயிருக்கிறது என்பதை அதன் காலடித் தடத்தை ஆய்வு செய்த பின்னர் அதிகாரிகள் தெரிவித்தபோது அதிர்ந்து போனோம்.

அதனைத் தொடர்ந்து நாங்கள் எச்சரிக்கை உணர்வுடன் செயல்படத் தொடங்கினோம். நடமாட்டக் கட்டுப்பாடு அமலில் உள்ளதால் மாணவர்கள் இன்னும் வளாகத்திற்கு வரவில்லை.

மக்கள் நடமாட்டம் குறைந்திருப்பதால் அருகில் உள்ள அடர்ந்த ‘ஜெராம் தோய்’ பூங்காட்டுப் பகுதியிலிருந்து சிறுத்தை வழி தவறி இங்கு வந்திருக்கலாம் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

2009 ஆம் ஆண்டில் பல்கலைக்கழகம் இந்த இடத்திற்கு மாற்றப்பட்ட பின்னர் ஒரு சிறுத்தை இப்பகுதியில் நடமாடுவது இதுவே முதல் முறை என்று மும்தாஸ் கூறினார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here