சிஐஎம்பி குழுமத்தின் விளையாட்டுத் தூதரானார்  சிவசங்கரி 

நாட்டின் முன்னணி ஸ்குவாஷ் விளையாட்டாளரான எஸ். சிவசங்கரியை சிஐஎம்பி குரூப் ஹோல்டிங்ஸ் பெர்ஹாட் குழுமம் தமது விளையாட்டுத் தூதர்களுள் ஒருவராக நியமித்துள்ளது.

இந்தக் கூட்டமைப்பு தொடர்பான உடன்படிக்கை ஒப்பந்த கையெழுத்து இளைஞர் – விளையாட்டுத்துறை அமைச்சர் ஹன்னா இயோ முன்னிலையில் நடைபெற்றது.

சிஐஎம்பி குழுமத்தின் சார்பில் டிஜிட்டல் வங்கி, வாடிக்கையாளர் பிரிவு தலைமைச் செயல் அதிகாரி எபெஃண்டி சாகுல் ஹமிட்  ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.

இது குறித்து பேசிய அமைச்சர், உலக நிலையிலான விளையாட்டாளராக உருமாறி வரும் இளம் திறமைசாலிகளை அடையாளம் கண்டு அவர்களுக்கு ஊக்கமளிப்பதில் சிஐஎம்பி குழுமம் பொறுப்புடைமையைக் கொண்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

சிஐஎம்பி குழுமம் சிவசங்கரியின் வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றியுள்ளது. குறிப்பாக தங்கப் பதக்கம் வெல்வதற்கான ஆர்டினி செயற்குழு விரைவுத் திட்டத்திலும் அவரை இடம்பெறச் செய்வதற்கு ஊக்கமளித்துள்ளது எனக் குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய எபெஃண்டி, நாங்கள் சிவசங்கரியின் விளையாட்டுப் பயணத்தைத் தொடர்ந்து பார்த்து வருகிறோம். அவரின் வளர்ச்சி நாட்டை மேலும் பெருமையடையச் செய்யும் என்று நாங்கள் நம்புகின்றோம் என்றார் அவர்.

இதனிடையே சிஐஎம்பி குழுமத்துடன் கூட்டமைப்பு வைத்துக் கொள்வதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டிருப்பது மிகவும் பெருமை அளிக்கிறது. எனது விளையாட்டு பயணத்துவ வளர்ச்சியில் சிஐஎம்பி முக்கியப் பங்காற்றியுள்ளது என்று சிவசங்கரி குறிப்பிட்டார்.

இவர் 2009ஆம் ஆண்டு முதல் சிஐஎம்பி குழுமத்தின் பல்வேறு போட்டிகள், திட்டங்களில் பங்கெடுத்துள்ளார். அது மட்டுமன்றி 2018ஆம் ஆண்டு  சிஐஎம்பி அறவாரியத்தின் ஸ்குவாஷ் கல்வி உபகாரச் சம்பளத்தையும் அவர் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here