பாகுபாடு காட்டாமல் வெளிப்படையாக நாங்கள் இயங்கி வருகிறோம்

இந்தியாவில் வர்த்தக காரணங்களுக்காக, பா.ஜனதாவினரின் வெறுப்பு பேச்சுகள் மீது நடவடிக்கை எடுக்க பேஸ்புக் நிறுவனம் மறுத்து வருவதாக அமெரிக்க பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டு இருந்தது. இதை சுட்டிக்காட்டி பேஸ்புக் தளம் மீது காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியது.

இந்நிலையில் இது குறித்து பேஸ்புக் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. அதில் எப்போதும் பாகுபாடு காட்டாமல் வெளிப்படையாக நாங்கள் இயங்கி வருகிறோம். பேஸ்புக்கில் யார் வேண்டுமானாலும் தங்கள் கருத்துகளை சுதந்திரமாக வெளிப்படுத்த முடியும்.

எந்தவகையிலும் பேஸ்புக்கில் வெறுப்பு மேலோங்குவதை ஏற்கமாட்டோம் எனவும் அந்நிறுவனம் உறுதியளித்தது.

தங்களது கொள்கைகளில் ஒரு சார்புடன் பேஸ்புக் நடந்துகொள்வதாக புகார் எழுந்த நிலையில் பேஸ்புக் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here