பயிற்சியில் பங்கேற்க மெஸ்ஸி மறுப்பு

இலவசமாக தன்னை விடுவிக்காத காரணத்தினால், பார்சிலோனா அணியின் பயிற்சி முகாமில் பங்கேற்க மெஸ்ஸி மறுத்து ஹோட்டல் அறையில் முடங்கியுள்ளார்.

சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில் பேயர்ன்மியூனிக் அணியிடம் பார்சிலோனா அணி 8- க்கு 2 என்ற கோல் கணக்கில் படுதோல்வியடைந்தது. இதனால், வெறுத்து போன பார்சிலோனா அணியின் நட்சத்திர வீரர் லயனல் மெஸ்ஸி அந்த அணியை விட்டு விலகி முடிவெடுத்துள்ளார். ஆனால், மெஸ்ஸியை இலசவமான விடுவிக்க முடியாது என்று பார்சிலோனா நிர்வாகம் அறிவித்து விட்டது. லா லீகா நிர்வாகமும் மெஸ்ஸி ஒப்பந்தம் செய்ய விரும்பும் அணிகள் 700 மில்லியன் யூரோ வழங்கினால் மட்டுமே அவரை விடுவிக்க முடியுமென்று உறுதியாக தெரிவித்துள்ளது .

பார்சிலோனா அணிக்காக 20 ஆண்டு காலம் விளையாடி வந்த மெஸ்ஸியின் ஒப்பந்தம் கடந்த 2017ம் ஆண்டு புதுப்பிக்கப்பட்டது. இதனால், அடுத்த சீசன் வரை பார்சிலோனா அணிக்கு விளையாட வேண்டும். அதே வேளையில், ஒவ்வொரு சீசன் முடிவடையும் போதும் ஜூன் 10 ஆம் தேதிக்குள் அணியிலிருந்து வெளியேறுவது குறித்து மெஸ்ஸி நிர்வாகத்துககு தகவல் அளித்து விட்டால், இலவசமாகவே வெளியேறலாம் என்ற சிறப்பு அனுமதியும் மெஸ்ஸிக்கு வழங்கப்பட்டிருந்தது

ஆனால், கொரோனா வைரஸ் காரணமாக நடப்பு சீசன் ஆகஸ்ட் மாதத்தில்தான் முடிவடைந்தது. இதன் காரணமாக அணியிலிருந்து வெளியேறுவது குறித்து மெஸ்ஸி பார்சிலோனா நிர்வாகத்துக்கு தகவல் தெரிப்பதில் தாமதம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து மெஸ்ஸியை இலவசமாக விடுவிக்க பார்சிலோனா மறுத்துள்ளதால் பிரச்னை முற்றியுள்ளது. தற்போது, பார்சிலோனா அணியின் புதிய பயிற்சியாளராக ரொனால்ட் கோமென் பொறுப்பேற்றுள்ளார். இவரின், தலைமையில் அடுத்த சீசனுக்கு அணியை தயார்படுத்தும் வகையில் பார்சிலோனா வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டனர். லூயீஸ் சௌரஸ், விடால்,க்ரீஸ்மேன் உள்ளிட்ட வீரர்கள் பயிற்சியில் பஙகேற்றுள்ள நிலையில், மெஸ்ஸி பயிற்சியை புறக்கணித்துள்ளார். மேலும் , மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளவும் ‘அவர் மறுத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here