விஜய் வசந்த் உருக்கம்

பிரபல தொழிலதிபரும், கன்னியாகுமரி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான வசந்தகுமார், கடந்த சில தினங்களுக்கு முன்னர் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் காலமானார். அவரது மறைவுக்கு அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்தனர். வசந்தகுமார் எம்.பி.யின் உடல் அவரது சொந்த ஊரான அகஸ்தீஸ்வரத்தில் நேற்று நல்லடக்கம் செய்யப்பட்டது.
இந்நிலையில், தனது தந்தை குணமாக வேண்டி பிரார்த்தனை செய்தவர்களுக்கும், தனது தந்தை இறந்தவுடன் இரங்கல் தெரிவித்தவர்களுக்கும் நடிகரும் வசந்தகுமாரின் மகனுமான விஜய் வசந்த் டுவிட்டரில் நன்றி தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறியதாவது: “1970 ஆம் ஆண்டு எனது தந்தை வெறும் கனவுகளுடன் சென்னை வந்தார். 50 ஆண்டுகளுக்கு பின் தன் கனவுகளை எல்லாம் நிஐமாக்கிய ஒரு உன்னத மனிதராக அவரை அவரின் சொந்த ஊருக்கு கொண்டு வந்து சேர்த்தேன். தாங்கள் என் தந்தையை நினைவு கூர்ந்ததர்க்கு நன்றி. மிஸ் யூ அப்பா”. என பதிவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here