புதிய கல்விக் கொள்கையை ஆராய…

மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை குறித்து ஆராய 7 பேர் கொண்ட குழுவை தமிழக அரசு நியமித்துள்ளது.

மத்திய அரசு அறிவித்துள்ள புதிய கல்விக் கொள்கைக்கு தமிழகத்தில் பல எதிர்ப்புகள் கிளம்பி வருகின்றன. குறிப்பாக புதிய கல்விக் கொள்கை, மும்மொழி கல்வியை வலியுறுத்துவதால் அதற்கு தமிழர்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். ஆனால் 39 ஆண்டுகளுக்கு பிறகு மாற்றம் செய்யப்படும் இந்த புதிய கல்விக் கொள்கை, கல்வியில் பெரும் மாற்றத்தை உண்டாக்கும் என்றும் 2030க்குள் அனைவருக்கும் கல்வி என்ற நிலையை இது ஏற்படுத்தும் எனவும் மும்மொழி கல்வியில் அந்தந்த பாடங்கள் தங்களுக்கு உகந்த மொழியை தேர்வு செய்து கொள்ளலாம் என்றும் மத்திய அரசு தெரிவித்தது.

இருப்பினும் தமிழகத்தில் இருமொழி கொள்கையே தொடரும் என திட்டவட்டமாக தெரிவித்த முதல்வர், புதிய கல்விக் கொள்கை குறித்து ஆராய குழு அமைக்கப்படும் என்றும் அந்த குழுவின் ஆலோசனை படியே புதிய கல்விக் கொள்கை குறித்து அரசு பரிசீலிக்கும் என தெரிவித்திருந்தார். இந்த நிலையில் புதிய கல்விக் கொள்கை பற்றி ஆராய தமிழக உயர்கல்வித்துறை செயலாளர் அபூர்வா தலைமையில் 7 பேர் அடங்கிய குழுவை அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

அந்த குழுவில் சென்னை பல்கலை. முன்னாள் துணை வேந்தர்கள் தியாகராஜன், துரைசாமி ஆகியோரும் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. துணை வேந்தர் பிச்சுமணியும், அழகப்பா துணைவேந்தர் ராஜேந்திரன், திருவள்ளூர் துணைவேந்தர் தாமரைச்செல்வி, காமராஜர் பல்கலை. கிருஷ்ணன் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here