70 விழுக்காட்டினர் வெளியேறவில்லை- டத்தோஶ்ரீ ஹம்சா

பார்ட்டி பிரிபூமி பெர்சத்து மலேசியாவின் 70 விழுக்காட்டு உறுப்பினர்கள் கட்சியை விட்டு வெளியேறியதாக பார்ட்டி பெஜுவாங் தானா ஆயர் (பெஜுவாங்) கூறியதை பெர்சத்து மறுத்துள்ளது.

அதன் பொதுச்செயலாளர் டத்தோஶ்ரீ ஹம்சா ஜைனுடின் கடந்த திங்கள் கிழமை நிலவரப்படி, 247 உறுப்பினர்கள் மட்டுமே கட்சியை விட்டு வெளியேறியதாகத் தனக்குத் தகவல் கிடைத்திருக்கிறது என்றார்.

உண்மையில், கட்சி அதன் உறுப்பினர்களை ஆண்டு இறுதிக்குள் ஒரு மில்லியனாக உயர்த்த இலக்கு வைத்துள்ளது என்றும் அவர் கூறினார்.

மிகச் சிறியதாக ஆரம்பித்த ஒரு கட்சிக்கு.  2017 இல் 46,000 உறுப்பினர்கள், பின்னர் அது 54,000 ஆக சற்று அதிகரித்தது, இன்று, பதிவுசெய்யப்பட்ட உறுப்பினர்களின் எண்ணிக்கை நாடு தழுவிய அளவில் 500,000 க்கும் அதிகமாக உள்ளது, பெர்சத்து கட்சியின் நான்காம் ஆண்டு விழாவில் உரையாற்றியபோது அவர் இவ்வாறு கூறினார்.

பிரதமரும் பெர்சத்து தலைவருமான டான்ஸ்ரீ முஹிடீன் யாசின்,  4ஆம் ஆண்டு கூட்டத்தை அதிகாரப்பூர்வமாக நடத்தினார்.

பெர்சத்து  முன்னாள் துணைத் தலைவர் டத்தோஶ்ரீ முக்ரிஸ் மகாதீர் முன்பு 70 விழுக்காடு பெர்சத்து உறுப்பினர்கள் கட்சியை விட்டு வெளியேறியதாகவும், முன்னாள் பெர்சத்து தலைவர் துன் டாக்டர் மகாதிர் முகமட் அமைத்த பெஜுவாங்கில் சேரத் தயாராக இருப்பதாகவும் முன்னர் கூறயிருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here