வீட்டு இரும்பு கதவை உடைத்து தூக்கி வீசிய ஹாலிவுட் ஆக்‌ஷன் ஹீரோ

தமிழ் சினிமாவில் சண்டைக்காட்சிகளில் முன்பெல்லாம் ஒரு லாஜிக் இருக்கும் கத்தியால் குத்தினால் என்ன ரியாக்‌ஷன் இருக்குமோ அதை வெளிப்படுத்துவார்கள். இரும்பு தடியால் அடித்தால் ஒரே அடியில் சாய்ந்து விடுவார்கள். சமீபத்திய சில படங்களில் இருப்பு ராட் வைத்து தலையில் அடித்தாலும் ஹீரோ அசையாமல் திரும்பிப் பார்த்து திருப்பி அடிப்பார். துப்பாக்கியால் சுட்டாலும் என்ன மாயமோ தெரியாது கீழே கூட விழ மாட்டார். இதெல்லாம் சில நம்ப முடியாத ஆக்‌ஷனெல்லாம் கோவுலிட் புருடாக்கள். ஒன்றிரண்டு ஹீரோக்கள் நிஜமாகவே ஆக்‌ஷன் செய்பவர்கள் இருப்பதையும் மறுப்பதற்கில்லை.

ஹாலிவுட்டில் சில ஹீரோக்கள் இருக்கிறார்கள். உயிரைப் பணயம் வைத்து ஆக்ஷ்ன் காட்சியில் ஈடுபடுவார்கள். துப்பாக்கியால் ஒரு புல்லட்தான் அதோடு எந்திரிக்க மாட்டார்கள். சில ஹீரோக்கள் யானை பலத்துடன் தங்களைக் கட்டு மஸ்தாக வைத்திருக்கின்றனர். இதெல்லாம் ஊளைச் சதை என்று சிலர் நக்கலடிப்பார்கள். ஆனால் அதெல்லாம் பலமான சதைதான் என்பதை நிரூபித்திருக்கிறார் ஒரு ஹீரோ. கிங் ராம்பேஜ், ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ். ஜூமான்சி போன்ற படங்களில் நடித்திருப்பவர் ராக். இவரது வீட்டில் எல்லாமே ரிமேட் கண்ட்ரரோலில் இயங்கும் வசதி கொண்டது. வீட்டு வாயிற்கதவு ஹைட்ராலிக் சிஸ்டத்தில் சுவிட் போட்டால் திறக்கும், ஆஃப் செய்தால் மூடிவிடும்.
ரெட் நோட்டீஸ் என்ற படத்தில் தற்போது நடித்து வருகிறார் ராக்.

இப்படத்தின் படப்படிப்புக்கு 100க்கணக்கான டெக்னீஷியன்கள், பணியாளர்கள் காத்திருந்தனர். படப்பிடிப்புக்கு செல்ல தயாரான ராக் வீட்டில் கரண்ட் முற்றிலுமாக கட் ஆகி இருந்தது. வாயிற்கதவைத் திறக்க முயன்ற போது கரண்ட் இல்லாததால் அது இயங்க வில்லை. சம்பந்தட்ட நிறுவனத்துக்கு போன் செய்து அவர்களை அழைத்தபோது எப்படியும் அங்கு வந்து சேர 45 நிமிடம் ஆகிவிடும் என்றனர். சீக்கிரம் வாங்க ஷுட்டிங் போகணும் அங்கு 100க் கணக்கில் எனக்காக வெயிட்டிங் என்று அவசரத்தை சொல்லி அவர்களை வரச் சொல்லிவிட்டு காத்திருந்தார். அதற்குள் படப்பிடிப்பு தளத்திலிருந்து போன் அழைப்பு வந்தது. பொறுமை இழந்த ராக் நேராக வாயிற்கதவருகே சென்றார்.

டெர்மினேட்டர் பாணியில் ரோபோ போல் மாறி ஹைட்ராலிக் மிஷினை கையாலேயே ஆட்டி பிடுங்கித் தூக்கி எறிந்தார். பிறகு கதவை உடைத்துத் தள்ளினார். வெளியில் வந்தபோது கதவை ரிபேர் செய்ய வந்தவர்கள் ராக்கின் கோபத்தையும் பலத்தையும் கண்டு வாயடைத்துப் போய் நின்றிருந்தனர்.அவர்களை ஒரு முறை முறைத்துவிட்டு ராக் காரில் ஏறி ஷூட்டிங்கிற்கு பறந்தார். நடிகர் ராகிற்கு இன்னொரு பேரும் இருக்கிறது டிவைன் ஜான்சன் என்பது தான்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here