திருச்சி’தே.மு.தி.க., தலைவர் விஜய்காந்த் பூரண குணமடைய வேண்டி, திருச்சி தே.மு.தி.க.,வினர், நேற்று, துாண்டி கருப்பசாமி கோவிலில் சிறப்பு பூஜை செய்துள்ளனர்.தே.மு.தி.க., தலைவர் விஜய்காந்துக்கு, கொரோனா நோய் தொற்று ஏற்பட்டதாக, தகவல் வெளியானது.
தொடர்ந்து, வழக்கமான மருத்துவ பரிசோதனைக்கு சென்ற போது, லேசான தொற்று இருப்பது தெரிந்ததால், உடனடியாக சிகிச்சை அளித்ததால், விஜய்காந்த் குணமடைந்து விட்டார், என்று கட்சித் தலைமை தகவல் வெளியிட்டது.இந்நிலையில், விஜய்காந்த் பூரண குணமடைய வேண்டும், என்று திருச்சி மாவட்டம், மருங்காபுரியில் உள்ள பிரசித்தி பெற்ற துாண்டி கருப்பசாமி கோவிலில், அக்கட்சியினர் வேண்டுதல் வைத்துள்ளனர்.
மருங்காபுரி வடக்கு ஒன்றிய செயலாளர் சக்தி பெருமாள்ராஜ் தலைமையில், நேற்று, துாண்டி கருப்பசாமி கோவிலில், சிறப்பு பூஜை செய்யப்பட்டது.மேலும், விஜய்காந்த் பூரண குணமடைந்தவுடன், வேல் செய்து வைப்பதாக நேர்த்திக்கடன் வைக்கப்பட்டுள்ளது, என்று அக்கட்சியினர் தெரிவித்தனர்.