நியூசிலாந்தை வீழ்த்தியது ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து பெண்கள் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரில் முதலாவது ஆட்டம் பிரிஸ்பேனில் நேற்று நடந்தது. இதில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 49.1 ஓவர்களில் 180 ரன்னில் ‘ஆல்-அவுட்’ ஆனது.

தொடர்ந்து 181 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 33.4 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 181 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கேப்டன் மெக் லானிங் 62 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். ஆஸ்திரேலிய அணி தொடர்ச்சியாக பெற்ற 19-வது வெற்றி இதுவாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here