மலேசிய தலைவர்கள் வெளிநாடுகளுக்கு உத்தியோகபூர்வ பயணம் மேற்கொள்ளலாம்

அமைச்சர் டத்தோஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப்

கோலாலம்பூர்: மலேசிய தலைவர்கள் உத்தியோகபூர்வ விஷயங்களில் வெளிநாடு செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள்.ஆனால் அவர்கள் திரும்பி வந்தபின் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட வேண்டும்.

அதில் எந்த விலக்குகளும் இல்லை என்று தற்காப்பு  அமைச்சர் டத்தோ ஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகோப் கூறினார். மலேசியாவுக்கு வரும் வெளிநாட்டு அதிகாரிகளைப் பொறுத்தவரை, அமைச்சர் பதவி அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் மட்டுமே உத்தியோகபூர்வ விஷயங்களில் நுழைய அனுமதிக்கப்படுவார்கள் என்றார்.

அனைத்து பிரதிநிதிகள் உறுப்பினர்களும் வருவதற்கு மூன்று நாட்களுக்கு முன்பு ஸ்வைப் பரிசோதனை செய்ய வேண்டும். விமான நிலையத்திற்கு வந்ததும் அவர்கள் மற்றொரு ஸ்வைப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று அவர் கூறினார்.

இத்தகைய பிரதிநிதிகள், கூட்டம் சம்பந்தப்படாத உத்தியோகபூர்வ நிகழ்வுகளுக்கு அனுமதிக்கப்பட்டனர் என்றார். ஜோகூரில் உள்ள பங்கூனான் சுல்தான் இஸ்கந்தர் வளாகம் வாகனங்களுக்கு காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை இயங்கும் என்றும் இஸ்மாயில் சப்ரி கூறினார். “இரண்டாவது இணைப்பைப் பொறுத்தவரை, கனரக வாகனங்களுக்கான இயக்க நேரம் 24 மணிநேரம், ஆனால் இலகுவான வாகனங்களுக்கு இது காலை 8 மணி முதல் நள்ளிரவு வரை மட்டுமே அனுமதிக்கப்படும் என்று அவர் கூறினார்.

ஆசிரியர்கள் மற்றும் உத்தியோகபூர்வ கடமையில் உள்ளவர்கள் தவிர சபாவில் உள்ள மாவட்டங்களுக்கு இடையே பயணம் தடைசெய்யப்பட்டுள்ளது என்றும் இஸ்மாயில் சப்ரி கூறினார்.

அங்குள்ள கடைகள், உணவகங்கள் மற்றும் பெட்ரோல் நிலையங்களைப் பொறுத்தவரை, காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை திறக்க அனுமதிக்கப்படுவதாக அவர் கூறினார்.

தினசரி சந்தைகள் காலை 6 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை செயல்பட முடியும், அதே நேரத்தில் இரவு சந்தைகள், பசார் தானி, தமு மற்றும் மொத்த சந்தைகள் தற்போதுள்ள எஸ்ஓபி அடிப்படையில் செயல்பட முடியும் என்று அவர் கூறினார்.

மேலும் தகவலுக்கு, mkn.gov.my இல் உள்ள தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் வலைத்தளத்தைப் பார்வையிடவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here