தமிழில் படமாகிறது சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாறு

தமிழ் சினிமாவின் கவர்ச்சி நடிகையாக வலம் வந்து அனைவரையும் கவர்ந்தவர் சில்க் ஸ்மிதா. இவரின் கண்ணசைவுக்கு மயங்காத ஆட்களே இல்லை என கூறலாம்.

அந்த அளவிற்கு பிரபலமான நடிகையாக வலம் வந்த சில்க் ஸ்மிதா கடந்த 1996 ஆம் ஆண்டு மர்மமான முறையில் தற்கொலை செய்து கொண்டு மரணமடைந்தார்.

இவருடைய வாழ்க்கை வரலாறு இந்தியில் படமாகி மாபெரும் வரவேற்பை பெற்றது. சில்க் ஸ்மிதாவாக வித்யா பாலன் நடித்திருந்தார்.

இந்தியைத் தொடர்ந்து தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் இப்படம் உருவானது. தற்போது தமிழில் சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாறு படமாக உள்ளது. இந்த படத்தை இயக்குனர் மணிகண்டன் இயக்கவுள்ளார்.

இவர் ஏற்கனவே சந்தானம் நடித்த கண்ணா லட்டு தின்ன ஆசையா என்ற படத்தை இயக்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சில்க் ஸ்மிதா போலவே காந்த பார்வையை உடைய ஒரு நடிகையை தேடி வருவதாக இயக்குனர் மணிகண்டன் தெரிவித்துள்ளார். இப்படம் தமிழில் மிகப் பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கும் படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here