காதலனுடன் சேர்ந்து செம லூட்டி அடித்த மீரா மிதுன்

தமிழ் சின்னத்திரையில் உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் மீரா மிதுன். இவர் சினிமாவில் 8 தோட்டாக்கள், தானா சேர்ந்த கூட்டம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

மூச்சுக்கு முன்னூறு முறை தன்னைத் தானே சூப்பர் மாடல் என சொல்லிக்கொண்டு தமிழ் சினிமாவின் டாப் ஹீரோக்கள் ஆன விஜய் சூர்யா தனுஷ் ரஜினி போன்றவர்கள் பற்றி கருத்துக்களை பதிவிட்டு விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறார்.

மேலும் இவர் சமீபத்தில் தன்னுடைய காதலன் புகைப்படத்தை முதன்முறையாக வெளியிட்டிருந்தார். இந்த நிலையில் தற்போது அவருடன் சேர்ந்து செம லூட்டி அடித்த புகைப்படங்களை ஒவ்வொன்றாக வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி பலரின் விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகிறது. பிரிட்ட படத்தில் தன்னுடைய புகைப்படங்களுக்கு யாரும் கமெண்ட்டுகளை பதிவிடாதவாறு இந்த புகைப்படங்களை பதிவேற்றியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here