5 வருடங்களுக்கு பிறகு இணையும் தனுஷ் மற்றும் அனிருத்

நடிகர், தனுஷ், நடிப்பில் காதலை கதைக்களமாக கொண்டு 2011ஆம் ஆண்டு வெளியான படம் 3. இப்படத்தில் தான் அனிருத் இசையமைப்பாளராக அறிமுகமானார். தனுஷ் நடிப்பில் வெளியான வேலையில்லா பட்டதாரி, மாரி உள்ளிட்ட படங்களுக்கும், தனுஷின் தயாரிப்பில் வெளியான எதிர்நீச்சல், காக்கி சட்டை போன்ற படங்களுக்கும் இசையமைத்து வந்தார். ஆனால் கடந்த 5 ஆண்டுகளில் தனுஷ் நடித்து வெளியான ஒரு படத்திற்கு கூட அனிருத் இசையமைக்கவில்லை.

இந்நிலையில் 5 வருடங்களுக்கு பிறகு தற்போது மீண்டும் இந்த கூட்டணி சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் மித்ரன் ஜவகர் இயக்கத்தில் தனுஷ் நடிக்கவிருக்கும் D44 படத்தில் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் இருவரின் ரசிகர்களுக்கு இடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here