இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியது இவர்தானாம்..

சென்னை: பிக்பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் வெளியேறப்போகும் போட்டியாளர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஹவுஸ்மேட்டுகளால் நாமினேட் செய்யப்படும் போட்டியாளர்களில் குறைந்த வாக்குகளை பெறும் போட்டியாளர் ஒருவர் வாரம் தோறும் நாமினேட் செய்யப்படுவது வழக்கம்.

அந்த வகையில் இந்த சீசனில் முதல் வாரத்தில் நோ எவிக்ஷன் என அறிவிக்கப்பட்டது. அடுத்த இரண்டாம் வாரத்தில் நடிகை ரேகா பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார்.

பாஸை பயன்படுத்தி கடந்த வாரம் பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான ஆஜித் குறைந்த வாக்குகள் பெற்று எவிக்ட்டானார். ஆனால் அவரிடம் எவிக்ஷன் ஃபிரி பாஸ் இருந்ததால் அதனை பயன்படுத்தி பிக்பாஸ் வீட்டில் நீடிக்கும் வாய்ப்பை பெற்றார். 11 போட்டியாளர்கள் இந்நிலையில் இந்த வாரம் நாமினேஷன் லிஸ்ட்டில் 11 போட்டியாளர்கள் இடம்பெற்றுள்ளனர்.

அதன்படி சோம் சேகர், வேல் முருகன், ஆஜித், நிஷா, ரியோ, அனிதா சம்பத், சுரேஷ் சக்ரவர்த்தி, ரம்யா பாண்டியன், ஜித்தன் ரமேஷ், சனம் ஷெட்டி, பாலாஜி முருகதாஸ் ஆகியோர் நாமினேஷன் லிஸ்ட்டில் இடம் பிடித்தனர்.

யார் வெளியேறப்போவது? 16 போட்டியாளர்களில் 11 போட்டியாளர்கள் நாமினேஷனுக்கு வந்ததால் யாருக்கு ஓட்டு போடுவது என விழி பிதுங்கி போயினர் ரசிகர்கள். இதனால் இந்த வாரம் யார் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. அதிக வாக்குகள் கிடைக்காது அதிகளவு வாக்குகள் பிரியும் என்பதால் யாருக்கும் அதிகப்படியான வாக்குகள் கிடைக்காது என கூறப்பட்டது. இதனால் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து யார் வெளியே போவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. வெளியேறிய நபர் நாளை ஞாயிற்றுக் கிழமை என்பதால் பிக்பாஸ் வீட்டில் இருந்து ஒருவர் வெளியேற்றப்படுவார்.

இந்நிலையில் இன்றும் நாளையும் கமல் பங்கேற்கும் எபிசோட் காட்சியாக்கப்பட்ட நிலையில் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய நபர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. பாடகர் வேல்முருகன் அதாவது பிக்பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் பாடகர் வேல் முருகன் வெளியேறியதாக நம்ப தகுந்த வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது. முதல் வாரத்தில் சுரேஷ் சக்கரவர்த்தியுடன் வேட்டி சண்டையில் ஈடுபட்டார் வேல்முருகன். சனமை கட்டிப்பிடித்து அதன் பிறகு பால் போடும் டாஸ்க்கில் வெற்றி பெற்றார். அப்போது தனது வெற்றியை கொண்டாடும் வகையில் தன்னுடைய பார்ட்னரான சனம் ஷெட்டியை கண்டப்படி கட்டிப்பிடித்து அவரது உடம்பில் தனது முகத்தை வைத்து தேய்த்தார்.

இந்த வாரம் சிக்கல் இதனை பார்த்த நெட்டிசன்கள் கண்டமேனிக்கு அவரை கழுவி ஊற்றினர். ஆனால் அந்த டாஸ்க்கில் வெற்றி பெற்றதால் கடந்த வாரம் நமினேஷன் புராசஸில் இருந்து தப்பித்தார் வேல் முருகன் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here