பஞ்சாப் மாநில அடையாள சின்னமாக நடிகர் சோனு சூட் நியமனம்

தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட மொழிகளில் நாயகியாக நடிகை அனுஷ்கா நடிப்பில் வெளியான அருந்ததி திரைப்படத்தில் வில்லனாக நடித்து ரசிகர்களின் கவனம் ஈர்த்தவர் நடிகர் சோனு சூட்.
பஞ்சாப்பின் மொகா மாவட்டத்தில் பிறந்தவரான சோனு, நாடு முழுவதும் கொரோனா வைரசின் பாதிப்புகளை முன்னிட்டு பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் முடங்கிய புலம்பெயர்ந்தோர் தங்களது சொந்த ஊருக்கு திரும்புவதற்கு பெரும் உதவி புரிந்தவர்.
இதனால் தேசிய அளவில் அவரது புகழ் பரவியது. நாட்டின் பல்வேறு இடங்களிலும் சிக்கிக்கொண்ட புலம்பெயர்ந்தோருக்கு வாகன வசதிகளை செய்து கொடுத்து மனிதநேயத்துடன் பணியாற்றியது, சமூகத்தின் அனைத்துத் தரப்பு மக்களாலும் வெகுவாக பாராட்டப்பட்டது.
இதற்கிடையே, நடிகர் சோனு சூட்டை பஞ்சாப் மாநில அடையாள சின்னமாக நியமிக்க வேண்டும் என அம்மாநில தலைமை தேர்தல் அதிகாரி கருணா ராஜூ, இந்திய தேர்தல் ஆணையத்திற்கு பரிந்துரை செய்திருந்தார்.
இந்நிலையில், பஞ்சாபின் மாநில அடையாள சின்னமாக நடிகர் சோனு சூட் நியமனம் செய்யப்பட்டு உள்ளார் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்கான ஒப்புதலை தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here