மெய்ப்பொருள் காண்பது அறிவு

People wearing face masks line up outside Xianning Central Hospital in Xianning, after the lockdown was eased in Hubei province, the epicentre of China's coronavirus disease (COVID-19) outbreak, March 26, 2020. REUTERS/Aly Song

கோவிட் தொற்று எண்ணிக்கை அச்சுறுத்தும் வகையில் உயர்ந்து வருவதாகப் பத்திரிகைச் செய்திகள் கூறுகின்றன. இச்செய்திகள் பத்திரிகை செய்திகள் என்பது மட்டும் அல்ல. அரசு தரப்பில் வழங்கப்படும் அதிகாரப்பூர்வ  செய்திகள் என்பதிலும் மாற்று கருத்துகள் இல்லை. 

அரசு வழங்கும் செய்திகளைத்தான் பதிதிரிகைகள் தருகின்றன. இதைத்தான் மக்களும் நம்புகின்றனர். 

உண்மையில் தொற்று அதிகரிதிருக்கிறது என்பதும் பலரின் சந்தேகத்தைக் கிளப்பியிருக்கிறது. சிலர் இது குறித்த கேள்விகளை ஊடகங்களில் எழுப்ப முற்பட்டுவிட்டனர் என்பதும் தெளிவாகத்தெரிகிறது. 

மக்கலின் நியாயமான் கேளிவிகளுக்கு முறையான பதில்கள் கிடைப்பதும் அரிது. பெரும்பாலும் புறக்கணிக்கப்படுகின்றன.

இந்த சந்தேகம் எழ காரணமாக அரசியல் என்றும் சிலர் கருத்துகள் கூறுகின்றனர். கருதுகள் கூறுவது அவரவர் தனிப்பட்ட உரிமை. அது ஒருபுறமிருக்க, தொற்றின் எண்ணைக்கைதான் இப்போதைய வருத்தமான செய்தியாக இருக்கிறது.

கோவிட் எண்ணிக்கை குறைந்தபாடில்லை . இதற்குக் காரணம் மக்கள் நடமாட்ட கட்டுப்பாடற்ற தன்மை என்கிறது செய்தி. அரசு உயர்மட்டக்குழுவினரும் இதைத்தான் ஒப்பாரியாகப்  பாடுகின்றனர். ஒட்டுமொத்த பழி மக்களையே சார்ந்திருக்கிறது என்பதுதான் பொருளென்றால் அரசு தரப்பு இன்னும் சரியான வழியைக் கடைப்பிடிக்கவில்லை என்பதையும் ஒப்புக்கொள்ளத்தானே வேண்டும்!

எம் சி ஓ, எஸ் ஓ பி உதரவுகளை மீறுவோருக்கு ஆயிரம் வெள்ளி அபராதமாக இருப்பதை அதிகாரிக்க வேண்டும் என்று தேசிய போலீஸ் படைத்தலைவர் டான்செரி அப்துல் ஹமிட் பாடோர் கூறியிருக்கிறார். இக்கருத்தில் தவறு இல்லை. சிந்திக்க வேண்டிய கருத்தாகவும் இருக்கிறது.

அதற்குமுன், அபராதத்தொகையை உயர்த்துவதில் ஓர் அர்த்தம் இருக்கவேண்டும் என்று சில தரப்பினர் கூறுவதிலும் நியாயங்கள் இருப்பதளொதுக்கிவிடவும் முடியாது

அபராதத்தொகையை உயர்த்துவதால் மட்டும் தொற்று எண்ணிக்கையைக் குறைத்துவிடமுடியுமா? என்றால் பதில் என்னவாக இருக்கும்? கடந்த ஓராண்டுக்குமேல் ஆகியும்  இன்னும் பதில் கிடைக்கவில்லை. நிரூபிக்கப்படவில்லை என்பதையும் கவனத்தில் கொள்வது நல்லது. ஆனாலும் சுகாதார நடவடிக்ககைகளைப் பாராட்டாமல் இருக்க முடியாது. 

மிகச்சரியான் நிபுணத்துவ முழு இயங்கவில்லை போலவே இருக்கிறதே!

அபராதத்தொகை என்பது மக்களை மன உளைச்சலுக்கு உள்ளாக்கும் என்பதையும் கருத்தில் கொள்வது நல்லது. 

சீனாவின் வூகானில் தோன்றிய கொரோனா தொற்று. அங்கு கட்டுப்பாட்டில் இருக்கிறது. அங்கு மட்டும் எப்படி இது சாத்தியம் என்பதை ஏன் தெரிந்துகொள்ளக்கூடாது. தெரிந்துகொள்ளும் முயற்சி இருப்பதாகத் தெரியவில்லை.

எப்போதுமே அபராதத்தால் மட்டுமே குற்றத்தைக்குறத்துவிட முடியாது என்பதுதான் இதுவரை உணரப்பட்டிருக்கிறது.

அரசின் சுகாதார நடவடிக்கையால். மக்கள் நனமைபெற்று வருகிறார்கள் என்பதும் உணமைதான். ஆனால், நடமாட்ட கட்டுப்பாட்டால் கூட இன்னும் முழுமையான பாதுகாப்பு கிடைக்கவில்லை என்றால் சுகாதார நடவடிக்கையில் மாற்றுச்சிந்தனைகள் மிகவும் அவசியமாகிறது என்பதையும் கவனத்தில் எடுத்துகொள்வது நல்லது.

பாதுகாப்பாக இருக்கும் போலீஸ்காரர்கள் 474 பேருக்குத் தொற்று ஏற்பட்டிருக்கிறது. 1628 போலிஸ்காரர்கள் தனிமைப்ப்டுத்தப்பட்டிருக்கின்றனர் என்பதும் செய்தி. இவர்களுக்குத் தொற்று ஏற்பட்டிருக்கும் காரணம் எதுவாக இருக்கும்? 

சாலைத்தடுப்பைத்தவிர்த்து அவர்கள் செல்லும் பிற இடங்களும் காரணங்களாக இருக்கலாம். அவர்களால் கூட தொற்று ஏற்படலாம் அல்லவா? இதில் ஏற்படும் கேள்விகள் பற்றியும் ஆலோசிக்க வேண்டும். அரசு அதிகாரிகளுக்கும் தொற்று எற்பட்டிருக்கிறது. அவர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். முதலில் அவர்களே அபராதத்துக்குரியவர்கள் என்பதும் வாதமாகிவிடும்.

பல பெற்றோர்க்கள் தங்கள் குழந்தைகளைப் பாதுகாப்பாக தங்கள் உறவினர்களிடம் சேர்த்துவிட்டு வேலைக்குப் போகவேண்டும். அவர்கள் வசிப்பிடம் தாண்டிச்செல்லவும் கூடும் . திரும்பவும் நேரிடும். அவர்கள் இதற்கான  நடமாட்ட கடிதங்களை யாரிடம் பெறமுடியும்?

மக்கள் விழிப்புணர்வைப் பெறாத வரையில் எந்த அபராதத்தாலும் தொற்றின் எண்ணிக்கையைக் குறைத்துவிடமுடியாது என்கிறார் பெட்டாலிங் ஜெயா நாடாளுமன்ற உறுப்பினர் மரியா சின் அப்துல்லா.

எவர் சொன்ன சொல்லாயினும் மெய்ப்பொருள் காண்பது அறிவு என்பதுபோல், சுகாதார நடவடிக்கையில் இன்னும் பலவீனம் இருக்கிறது என்பதை ஏற்றுக்கொண்டால் கூடுதல் அபராதத்தால் நன்மை விளையாது.

அமெரிக்காவில் நூறு நாள் முகக்கவசம் பயன்பாடு அமலில் இருப்பதைப் போல. முகக்கவசமே பாதுகாப்பானது. பாதுகாப்பான முகக்கவசத்தாலும் பொது இடங்களில் சமூக இடைவெளியாலும் தொற்றைக் குறைக்கமுடியும். இன்னும் கூடுதலான நடவடிக்கைகளை நிபுணர்கள் கூறமுடியும். 

மக்கள் பண நெருக்கடியால் தவிக்கின்றனர். இந்நேரத்தில் கூடுதல் அபராதம் சரியான யோசனை அல்ல!

                                                                              -சிற்பியன்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here