ஆஸ்கார் வெற்றியாளர்… பழம்பெரும் நடிகர் கிறிஸ்டோபர் ப்ளூமர் காலமானார்

லாஸ் ஏஞ்சல்ஸ் :

ஆஸ்கார் விருது பெற்றவரும், கனடா நாட்டின் பழம்பெரும் நடிகருமான கிறிஸ்டோபர் ப்ளூமர் காலமானார். அவருக்கு வயது 91.

தி சவுண்ட் ஆப் மியூசிக் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் ப்ளூமர். இப்படத்தில் மனைவியை இழந்தவராக, கேப்டன் ஜார்ஜ் வோன் டிராப் என்னும் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்ததன் மூலம் பலராலும் பேசப்பட்டவர் ப்ளூமர்,

இசை குடும்பம், இரண்டாம் உலகப் போருக்கு முன் ஆஸ்திரியாவில் அவர்களின் ஆளுமை தொடர்பான கதையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம் அது. இந்த படத்தின் மூலம் ப்ளூமர் மிக பிரபலமடைந்தார்.

பத்தாண்டுகளுக்கும் மேலாக திரையுலகில் பயணம் செய்த இவர், வாழ்வின் பிற்பகதியிலேயே ஆஸ்கார் விருதினை வென்றார்.

கனெக்டிகட்டில் தனது மனைவி எலைனி டெய்லரடன் வாழ்ந்து வந்ததாக அவரது நீண்ட கால நண்பரும், மேனேஜருமான லூயி பிட் தெரிவித்துள்ளார்.

ப்ளூமர்பற்றி அவர் கூறுகையில், அவர் மிகவும் அற்புதமான மனிதர். தனது நடிப்பை மிகவும் மரியாதையுடன் நேசித்தவர். நகைச்சுவை மற்றும் இசை அவரது வார்த்தையில் தவழும் என தெரிவித்துள்ளார்.

கிறிஸ்டோமர் ப்ளூமர் 2012 ஆம் ஆண்டு, தி பிரினர்ஸ் என்ற படத்தில் நடித்ததற்காக சிறந்த துணை நடிகருக்கான ஆஸ்கார் விருதினை வென்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here