பவானி விஜய் சேதுபதியை வெளிப்படையாக புகழ்ந்த சூப்பர் ஸ்டார்.! பேட்டியின் போது புகழாரம்.!

பொங்கல் தினத்தில் வெளியான மாஸ்டர் திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. அத்துடன் வசூலில் சாதனை புரிந்து தியேட்டர் உரிமையாளர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்தது.
இந்த படத்தை வீட்டில் இருந்தே அனைவரும் பார்க்கும் வகையில் அமேசான் ஆன்லைன் தளத்தில் வெளியிடப்பட்டது.

இது மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்த படத்தை பார்த்த பிரபலங்கள் பலர் தற்போது தங்களுடைய கருத்துக்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில், தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி ஒரு தெலுங்கு பட அறிமுக விழாவில் பேசிய பொழுது, நடிகர் விஜய் சேதுபதியின் நடிப்பு குறித்து புகழ்ந்து இருக்கிறார்.

அவர், “கதாநாயகனாக நடிப்பதை விட கதாபாத்திரங்களை மிகவும் அழகாக தேர்வு செய்து நடிப்பதில் இந்திய அளவில் சிறந்து விளங்கும் நடிகர் என்றால் அது விஜய் சேதுபதிதான். மாஸ்டர் படத்தில் நான் பார்த்த பொழுது கதாநாயகனை விட வில்லன் கேரக்டரில் நடித்த விஜய் சேதுபதி என்னை மிகவும் கவர்ந்தார்.

விஜய் சேதுபதியை இந்தியா மட்டுமல்லாமல் வெளிநாட்டினரும் பாராட்டி வருகின்றார். என்னுடைய உப்பனா படத்தில் விஜய் சேதுபதியை ஒப்பந்தம் செய்த உடனே படம் வெற்றி பெற்றுவிட்டதாக நான் நினைத்தேன்.” என்று கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here