வானொலி நேயர்களுக்கு மோடி வாழ்த்து
புதுடெல்லி:
ஆண்டுதோறும் பிப்ரவரி 13-ஆம் தேதி உலக வானொலி தினம் கொண்டாடப்படுகிறது. நேற்றும் அந்த தினம் கொண்டாடப்பட்டது.
இதையொட்டி வானொலி நேயர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார். இதையொட்டி அவர் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், “மகிழ்ச்சிகரமான வானொலி தினம். புதுமையான நிகழ்ச்சிகளாலும், இசையாலும் ஈர்த்து வருகிற வானொலியின் நேயர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
வானொலி ஒரு அற்புதமான ஊடகம். இது சமூக தொடர்பை ஆழப்படுத்துகிறது. நான் தனிப்பட்ட முறையில் அதன் நேர்மறையான தாக்கத்தை அனுபவிக்கிறேன். நன்றி மன்கிபாத் (மனதின்குரல்)” என கூறி உள்ளார்.