இந்த படத்தில் சித்ரா கால் சென்டரில் வேலை செய்யும் கனவுகள் நிறைந்த தைரியமான பெண் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். திரைப்பட கல்லூரியில் பயின்று வரும் மாணவரான ஜே.சபரீஷ் என்பவர் இந்த படத்தினை இயக்கி இருக்கிறார்.


இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர், டீசர் , டிரைலர் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் கால்ஸ் திரைப்படத்தினை வரும் பிப்ரவரி 26- ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.