ஜி வி பிரகாஷ் நடிக்கும் வணக்கம்டா மாப்ள படத்தில் தனுஷ் பாடல் .
நடிகரும் இசையமைப்பாளருமான ஜிவி பிரகாஷ் ஏற்கனவே சுமார் 10 திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் எம் ராஜேஷ் இயக்கத்தில் ஜீவி பிரகாஷ் நடிக்கும் திரைப்படம் குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.
இந்த படத்தை பிரமாண்டமாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. இந்த நிலையில் சற்று முன்னர் இந்த திரைப்படத்திற்கு வணக்கம்டா மாப்ள என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தில் ஜி வி பிரகாஷுக்காக தனுஷ் ஒரு பாடலைப் பாடியுள்ளார். டாடா பாய் பாய் என ஆரம்பிக்கும் அந்த பாடலை படக்குழு இணையத்தில் வெளியிட்டுள்ளது.
இந்த பாடலுக்கு இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைத்துள்ளது.