பள்ளி மாணவர்களுக்கு புத்தககப் பைகள்

போர்ட்டிக்சன்,
கம்போங் இந்தியா புக்கிட் பிளாண்டோக் பள்ளிக்குச் செல்கின்ற மாணவர்களுக்கு புத்தகப்பைகள் வழங்கப்பட்டன.  கம்போங் இந்தியா புக்கிட் பிளாண்டோக் கிராமத்து தலைவர் ஏற்பாட்டில் இவை  வழங்கப்பட்டன.

நேற்று முன்தினம் கம்போங் இந்தியா புக்கிட் பிளாண்டோக்கில் அமைந்துள்ள மண்டபத்தில்  இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது .

சுவா சட்டமன்ற உறுப்பினர் டத்தோ மைக்கல் ஏக் ஆதரவோடு இந்த நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து கம்போங் இந்தியாவில் மக்களுக்கு தேவைப்படும் அனைத்து உதவிகளையும் தாங்கள் வழங்கி வருகிறோம் என்றார் அவர்.

குறிப்பாக பி.40 கீழ் வாழ்ந்து வரும் குடும்பங்களை அடையாளம் கண்டு அதற்கான உதவிகளை மேற்கொண்டு வருவதாக செல்வம்  என்பவர் தெரிவித்தார்.

டத்தோ மைக்கல் ஏக் சுவா சட்டமன்றத்தில் அனைத்து மக்களின் நலனில் அக்கறை கொண்டு செயல்பட்டு வருகிறார். அதே சமயத்தில் அவர் எந்த கட்சி என்றும் பார்ப்பதில்லை. சுவா சட்டமன்றத்தொகுதியில் வாழ்ந்து வரும் மக்களுக்கு தேவைப்படும் உதவிகளை அவர் வழங்கி வருகிறார். அவருக்கு பக்கபலமாக நாங்கள் செயல்பட்டு வருகிறோம் என்று செல்வம் தெரிவிதார்.  

க.கலை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here