தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு தேசிய அளவில் தமிழில் கதை சொல்லும் போட்டி 2021

இறுதிச் சுற்று வெற்றியாளராக கெடா கூலிம் தமிழ்ப்பள்ளி மாணவர் டர்வின் தேர்வு

பந்திங், 

தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கென்று தேசிய அளவில் 2021 கதை சொல்லும் போட்டியின் இறுதிச்சுற்றில் கெடா கூலிம் தமிழ்ப்பள்ளி மாணவர் எம்.டர்வின் முதல் நிலை வெற்றியாளராக தேர்வு பெற்றார்.

தமிழ்ப்பள்ளிகளின் படிநிலை 1 இன் 1,2,3ஆம் வகுப்புகளைச் சேர்ந்த மாணவர்கள் கலந்து கொள்ளும் வகையில் நடத்தப்பட்ட இப்போட்டிக்கு நாடு முழுவதும் உள்ள தமிழ்ப்பள்ளிகளிலிருந்து சிறப்பான ஆதரவு கிடைத்தாகவும் அதன்படி தேர்வுச் சுற்றுகள் முடிந்து போட்டியின் இறுதிச் சுற்று கடந்த 20.2.2021 நடைபெற்றதாக போட்டியின் ஏற்பாட்டுக் குழு ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

இயங்கலை வாயிலாக நடத்தப்பட்ட இப்போட்டியில் நீதிபதிகளின் முடிவுகளின் படி முதல் பரிசை கூலிம் தமிழ்ப்பள்ளி மாணவர் எம். டர்வின் பெற்ற வேளையில் இரண்டாவது பரிசை மலாக்கா, டுரியான் துங்கால் தமிழ்ப்பள்ளி மாணவி கே.யாதவி பெற்றார்.

மூன்றாவது பரிசை ஜோகூர், லாபிஸ் தமிழ்ப்பள்ளி மாணவர் எஸ்.ராம்ஜெகாநாத் பெற்றார். தொடர்ந்து நான்காம் நிலை வெற்றியாளராக காப்பார் மெதட்டிஸ் தமிழ்ப்பள்ளி மாணவி

எஸ்.லக்சீத்தா, ஐந்தாம் நிலை வெற்றியாளராக மலாக்கா, பாத்தாங் மலாக்கா தமிழ்ப்பள்ளி மாணவர் எஸ்.மித்தீஸ்வன் பெற்றார்.

மேலும் ஆறாம் நிலையில் பந்திங் தெலுக் டத்தோ மாணவி என்.வர்ஷணா, ஏழாம் நிலையில் ஜோகூர், லாபிஸ் தமிழ்ப்பள்ளி மாணவி பி.கிஷ்ராவ்,எட்டாம் நிலையில் கிள்ளான் சிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளி மாணவி எம். ஜீவீதாசெல்வி, ஒன்பதாம் நிலையில் ஜோகூர், லாபிஸ் தமிழ்ப்பள்ளி மாணவி ஆர். அனுஷ்ஸ்ரீ, பத்தாம் நிலையில் நெகிரி செம்பிலான் கேம் அஸ்கார் மெலாயு தமிழ்ப்பள்ளி மாணவர் பி.அர்வின்ராஜ் ஆகியோர் தேர்வு பெற்றனர்.

அண்மையில் தேசிய அளவில் திருக்குறள் போட்டி ஒன்றை தமிழ்ப்பள்ளிகளின் படிவம் 2 இன் 4 , 5 , 6 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இயங்கலை வாயிலாக நடத்தப்பட்டது.

இதில் நாடு முழுவதும் உள்ள தமிழ்ப்பள்ளிகளிலிருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பதிந்து கொண்டு அதில் 350 மாணவர்கள் போட்டியில் பங்கு பெற்று அதில் பத்து மாணவர்கள் இறுதிச் சுற்றுக்கு தேர்வு பெற்று வெற்றியாளர்களாக அறிவிக்கப்பட்டு ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டது.

படிநிலை இரண்டைச் சேர்ந்த மாணவர்களுக்காக நடத்தப்பட்ட போட்டிக்கு கிடைத்த ஆதரவின் அடிப்படையில் தமிழ்ப்பள்ளிகளின் படிநிலை 1 இன் 1 , 2 , 3 வகுப்புகளைச் சேர்ந்த மாணவர்களுக்கென்று இந்தத் தமிழில் கதை சொல்லும் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டது.

எம்.எஸ்.மணியம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here