அம்மாவின் வளர்ப்பு அருமை!

நடிகை ஜான்வியின் செயலைப் பாராட்டும் ரசிகர்கள்

இந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்தவர் மறைந்த ஸ்ரீதேவி. தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் நடித்திருந்தார்.
அவரது மகள் ஜான்வி கபூரும் நடிப்புத் துறைக்குள் என்ட்ரியாகி இருந்தார். வரும் 11 ஆம் தேதியன்று அவர் நடிப்பில் உருவாகியுள்ள ஹிந்தி மொழிp படமான ‘ரூஹி’ வெளிவரவுள்ளது.

இந்தப் படத்தின் முன்னோட்டக் காட்சி அண்மையில் திரையிடப்பட்டுள்ளது. அந்த முன்னோட்ட காட்சிக்கு தனது உதவியாளரை குடுமபத்தினருடன் அழைத்திருந்தார் நடிகை ஜான்வி. அதிலும் உதவியாளரின் குழந்தையைக் கட்டி அணைத்தபடி போஸும் கொடுத்துள்ளார் அவர்.

இது சமூக வலைதளங்களில் பகிரப்பட்டதும் ‘உங்க அம்மாவின் வளர்ப்பு அருமை’ என ஜான்வியின் செயலை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here