மாடுகட்டி போரடித்தால் மாளாது செந்நெல்

 – ஆனை கட்டி போரடித்த மதுரை விவசாயி

மதுரை மீனாட்சியின் அரசாட்சி குறித்து பாடும் அல்லி அரசாணி மாலை என்ற பாடல் தொகுப்பில் ‘மாடு கட்டி போரடித்தால் மாளாது செந்நெல்லென்று ஆனை கட்டிப் போரடிக்கும் அழகான தென்மதுரை’ என்று குறிப்பிடப்பட்டிருக்கும் அந்த பாடல் வரிகளை நிஜமாக்கி காட்டியிருக்கிறார் மதுரை விவசாயி ஒருவர்.

அழகர்கோவில் அருகே உள்ள புலிப்பட்டி கிராமத்தில் சுமதி என்ற பெயர் உடைய யானை, நெற்கதிர்களின் மீது உலாவி போரடித்த காட்சி, சங்க கால நினைவுகளை கொண்டு வந்திருக்கிறது.

இந்த காட்சிகள் வெளியாகி பரவிவரும்நிலையில் இதுபற்றி பேசிய யானையின் உரிமையாளரான மதன், 4 தலைமுறையாக யானை வளர்த்துவருவதாக தெரிவித்தார்.புலிப்பட்டியில் உள்ள 4 ஏக்கர் நிலத்தில் அறுவடை செய்த நிலையில், மதுரையின் சங்க கால இலக்கிய காட்சியை கண்முன்னே கொண்டுவரும் எண்ணத்தில் தங்கள் யானையைக் கொண்டு போரடித்ததாக மதன் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here