இவையெல்லாம் நம் இளைஞர்களுக்கு ஜுஜுப்பி

இளைஞர்கள் என்றால் விளையாட்டுத்தனம் நிறைந்தவர்கள் என்று இலகுவாகக் கூறமுடியும். இளைஞர்களுக்கு விளையாட்டு என்பது கரும்பாக இருக்கும். அதனால்தான் விளையாட்டை விரும்புகிறார்கள்.

விளையாட்டில் நன்மை தரும் விளையாட்டு தீமைதரும் விளையாட்டு, ஆரோக்கியமான விளையாட்டென்று பரவலாக இருக்கின்றன.

ஆனாலும் இளைஞர்கள்  இவ்விளையாட்டுகளைத் தேர்வதில் பேதம் பார்ப்பதில்லை. சூழலுக்கு ஏற்ப எது அமைகிறதோ அதையே விரும்புகிறார்கள்.  அப்போது அது தேவியின் அர்த்தமாகிவிடுகிறது.

சாலையில் நடந்து செல்லும்போது, சாலையில் கிடக்கும் காலி டின்கள்  கூட விளையாட்டுக்கருவிகளாக  மாறிவிடுகின்றன.  காலி டின்களை எத்தி விளையாடுவது சுகமானதாக இருப்பதை இக்கால பெரிசுகள் பலர் உணர்வதில்லை.

காலி டின்களை எத்துவது, எத்தி எத்தி விளையாடுவதும் நல்ல முயற்சி என்பது பெரிசுகளுக்குத்தெரியாது. சிறுசுகளுக்கு இது ஆனந்தமான விளாயாட்டு. பொழுது போக்கு.

இந்த விளையாட்டில் அதிசய விளைவுகள் இருப்பதை பலர் அறிந்திருப்பதில்லை. குறிப்பாக காலி டின்கள் குப்பையில் சேர்க்கப்படவேண்டியவைதான். சாலையில் ஏன் கிடைக்கிறது? இந்த ஆராய்ச்சி பெரிய அவசியாமானதா? அதற்குமுன், காலால் எத்தி காலி டின்னை உயரே எழும்பச் செய்யும் போது அதற்காக எடுத்துக்கொள்ளும் முயற்சியில் மனம் ,குறிக்கோள், வேகக்கட்டுப்பாடு,  எண்ணம், முயற்சி ,பயிற்சி, ஆற்றல் , லாவகம்   என்றெல்லாவற்றிலும் மூளைசெயல்பாடு ஒருங்கிணைக்கப்படுகிறது. இவ்வகையில் இது சிறப்பான விளைட்டுதானே! 

இதை பல் உணர்வதில்லை. சில இதை திமிர் என்பார்கள். சிலர் இதை கொழுப்பு என்பார்கள். இதை உணராதிருப்பதில் எந்தக்குடியும் முழுகிவிடாது. யாரும் பாதிக்கப்படவும் போவதில்லை.

ஆனாலும் பொது ஒழுங்கு என்று ஒன்று இருக்கிறது. அதாவது சாலையில் போவோர் , வருவோர், பக்கத்தில் உள்ளவர்கள், வாகனங்கள் என்றெல்லாம் இருக்கிறதஙதில் கவனம் எழ வேண்டும்.

இவற்றில் கூட பொது கட்டுப்பாடு இருக்கிறது. அதையும் அறிந்தே இளைஞர்கள் விளையாடுகிறார்கள். இதில் பொது சுற்றுச்சூழல் இருக்கிறது. அதையும் கற்றுகொள்கிறார்கள். 

காலி டின்கள் என்பதில் ஏகப்பட்ட சமாச்சாரங்கள் இருக்கின்றன்ளதில் தேங்கிக் கிடக்கும் மழை நீரும் வெளியாகிவிடுகிறது, உணமியில் இதில் சுகாதாரமும் அடங்கியிருக்கிறது.  இது தனி மனித விளையாட்டு என்றாலும் இருவர், மூவர், நாலவராகக் கூட விளையாடலாம் தானே!

இதே முறையில் தானே சில விளையாட்டுகள் உதயமாகி இருக்கின்றன. அந்த விளையாட்டுகளுக்கெல்லாம் இந்த விளையாட்டுதான் மூலமாக இருக்க வேண்டும்.

இப்போதெல்லாம் புதிய விளையாட்டுகள் ஆடப்படுவதில்லை. பந்தாட்டம் சுருங்கி சிறைக்குள் ஆடும் விளையாட்டாகிவிட்டது. பூப்பந்து தொலைந்துவிட்டது. இந்திய பாரம்பரிய விளையாட்டுகள் தொலைந்தே போய்விட்டன.

இப்படியே விட்டால் அவ்விளையாட்டுகளுக்கு இனச் சாயம் பூசி, அவை தங்கள் விளையாட்டுளாய் மாற்றிவிடுவார்கள். அப்படியென்றால் காலி டின்கள் யாருடைய விளையாட்டு?

நம் விளையாட்டுகளே நம் அடையாளம். அதைக்காப்பாற்றுவது நம் கடமையல்லவா? 

நம் இளைஞர்கள் இந்த விளையாட்டை புதுமையாக சிந்தித்தால் டின்களைக் குப்பத்தொட்டிகளுக்குள் போட்டுவிட்டு மூங்கில் பந்தாட்டத்தில் கவனம் செலுத்தலாமே!

நம் இளைஞர்களுக்கு இவையெல்லாம் ஜுஜுப்பி.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here