-துக்க நாள் 1943, மார்ச் 22
வரலாற்றில் மிக அதிக அளவிலான உயிர்ச்சேதத்தை ஏற்படுத்தியது இரண்டாம் உலகப்போர். 1943-ஆம் ஆண்டு இந்த உலகப்போர் உக்கிரமாக நடைபெற்றுக்கொண்டிருந்த சமயத்தில், பெலாரஸ் நாட்டின் மின்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள காட்டின் என்ற கிராமத்திற்குள் மார்ச் 22ஆம் தேதி நாசி படையினர் புகுந்து கண்மூடித்தனமாக தாக்கினர்.

கிராமங்களில் உள்ள வீடுகளை தீயிட்டுக் கொளுத்தினர். வீட்டில் இருந்து தப்பிக்க முயன்றவர்கள் அனைவரும் எந்திர துப்பாக்கிகளால் சுட்டுத் தள்ளப்பட்டனர். இதனால் அந்த கிராமத்தில் உள்ள அனைவரும் ஒட்டுமொத்தமாக இனப்படுகொலை செய்யப்பட்டனர்.
இதேபோல் நாசி படையினர் நடத்திய கொடூர தாக்குதலில் பல கிராமங்களில் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன. பொதுமக்களும் ஈவு இரக்கமின்றி கொன்று குவிக்கப்பட்டனர். நாசி படையினரின் ஆதிக்கத்தில் இருந்த மூன்று ஆண்டுகளிலும், அந்த நாட்டில் சுமார் 2 மில்லியன் மக்கள் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.