இரு வாகனங்கள் சம்பந்தப்பட்ட விபத்தில் மூவர் பலி

ஜாலான் லஹாட் டத்து-சண்டகன், பத்து 16 இல், செவ்வாய்க்கிழமை (ஜூலை 1) இரவு, செம்பனை ஏற்றிச் சென்ற டிரெய்லருடன் நான்கு சக்கர வாகனம் மோதியதில் மூன்று பேர் கொல்லப்பட்டனர். லஹாட் டத்து தீயணைப்பு, மீட்பு நிலையத் தலைவர் சும்சோவா ரஷீத் கூறுகையில், பலியானவர்கள் ஓட்டுநர் முகமட் அசிசி (28), பயணி முகமட் ரஸ்மான் அஹ்மத் கெச்சில் (28), பின்னால் அமர்ந்திருந்த முகமட் சுல்கைரி இஸ்மாயில் (29) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

வாகனத்தில் சிக்கிய அனைவரும் தீயணைப்பு வீரர்களால் மீட்கப்பட்டு, மருத்துவ பணியாளர்களால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக உறுதிப்படுத்தப்பட்டது. இதற்கிடையில், டிரெய்லர் ஓட்டுநர், 61 வயதுடையவர், லேசான காயங்களுக்கு உள்ளாகி, மேலதிக சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் லஹாத் டத்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் என்று அவர் புதன்கிழமை (ஜூலை 2) செய்தியாளர்கள் தொடர்பு கொண்டபோது கூறினார்.

சம்சோவாவின் கூற்றுப்படி, விபத்து தொடர்பான துயர அழைப்பு MERS999 வழியாக இரவு 8.52 மணிக்கு வந்தது. மேலும் 12 தீயணைப்பு வீரர்கள் கொண்ட குழு, இயந்திரங்கள் மற்றும் அவசர சேவைகள் உதவிப் பிரிவுடன், நிலையத்திலிருந்து 30 கி.மீ தொலைவில் அமைந்துள்ள சம்பவ இடத்திற்கு உடனடியாக அனுப்பப்பட்டது. இறந்தவர்கள் அனைவரும் மேலதிக நடவடிக்கைகளுக்காக காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும், சம்பவ இடத்தில் மேலும் எந்த ஆபத்தும் இல்லை என்பதை உறுதிசெய்த பிறகு, நள்ளிரவு 12.40 மணிக்கு நடவடிக்கை முடிவடைந்ததாகவும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here