செராஸ், தாமான் பெர்த்தாமா பகுதியில் திடீரென 3 மீட்டர் ஆழமுள்ள பள்ளம்

செராஸ், தாமான் பெர்த்தாமா பகுதியில் திடீரென 3 மீட்டர் ஆழமுள்ள பள்ளம் உருவாகியதைத் தொடர்ந்து, அப்பகுதி குடியிருப்பாளர்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.

ஏப்ரல் 28ஆம் தேதி ஜாலான் செலார் மற்றும் ஜாலான் செலாங்காட் சந்திக்கும் பகுதியில் இந்த பள்ளம் தோன்றியுள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, அந்த இரண்டு சாலைகளின் ஒரு பகுதி மற்றும் ஜாலான் செமேரா பாடி 1 சாலையும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

அந்தப் பகுதியில் நடைபெறும் மேம்பாட்டு திட்டத்தின் கீழ், குத்தகை நிறுவனத்தால் மேற்கொள்ளப்பட்ட ஆரம்பக் கழிவுநீர் குழாய் அமைக்கும் பணியின் போது இந்த பள்ளம் ஏற்பட்டதாக நம்பப்படுகிறது.

இந்நிலையில், DBKL, மேம்பாட்டாளர் மற்றும் குடியிருப்பாளர்களுடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், பாதுகாப்பு நடவடிக்கையாக சாலை மூடி வைக்க தீர்மானிக்கப்பட்டதாக செராஸ் நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here