214ஆவது போலீஸ் தினம் – மாமன்னர் வாழ்த்து

கோலாலம்பூர்: மாமன்னர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாஅதுதீன் அல்-முஸ்தபா பில்லா ஷா, நாடு முழுவதும் உள்ள அனைத்து அர்ப்பணிப்புள்ள காவல்துறை அதிகாரிகளுக்கும், போலீஸ் வீரர்கள் மற்றும் ஓய்வு பெற்றவர்கள் உட்பட, 214 ஆவது போலீஸ்  தின வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார்.

இறையாண்மை, தேசிய பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்கு ஆகியவை தொடர்ந்து பாதுகாக்கப்பட்டு பராமரிக்கப்படுவதை உறுதி செய்வதில் அனைத்து காவல்துறை ஊழியர்களுக்கும் அவர்களின் சேவைகள், அர்ப்பணிப்பு மற்றும் தியாகங்கள் குறித்து மன்னர் தனது பாராட்டுகளைத் தெரிவித்தார்.

கடந்த ஆண்டு முதல் கோவிட் -19 தொற்றுநோயை எதிர்ப்பதில் முன்னணியில் இருந்தவர்களாக அயராது உழைத்ததற்காக போலீஸ் படையினருக்கு அவரது நன்றியையும் பெருமையையும் வெளிப்படுத்தினார்.

வியாழக்கிழமை (மார்ச் 25) இஸ்தானா நெகாராவின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் வெளியான அறிக்கையின்படி, அனைத்து காவல்துறை அதிகாரிகளும் பணியாளர்களும் மக்கள் மற்றும் நாட்டின் இறையாண்மை, பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வைப் பாதுகாப்பதில் தொடர்ந்து வலுவாகவும் உற்சாகமாகவும் பணியாற்றுமாறு கேட்டுக் கொண்டார்.

அந்த அறிக்கையில், சுல்தான் அப்துல்லாஹ் அனைத்து காவல்துறை அதிகாரிகளையும் தொடர்ந்து அனைத்து விதமான அச்சுறுத்தல்களிலிருந்தும், பேரழிவுகளிலிருந்தும் அல்லாஹ்வால் தொடர்ந்து ஆசீர்வதிக்கப்பட்டு பாதுகாக்கப்பட வேண்டும்  என்றும் பிரார்த்தனை செய்தார். – பெர்னாமா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here