அம்னோ தோல்வி கண்ட தொகுதிகளை மஇகாவும் கேட்கலாம் தானே? டத்தோ அசோகன் கேள்வி

 

கோலாலம்பூர்-

சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியை மஇகாவிடமிருந்து பெற வேண்டுமென அத்தொகுதி அம்னோ புத்ரி தலைவி கூறியிருப்பது வேடிக்கையாக உள்ளதென மஇகா தலைமைச் செயலாளர் டத்தோ எம்.அசோகன் கருத்துரைத்தார்.

நாட்டின் முதல் தேர்தல் தொடங்கி சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியில் மஇகா களமிறங்கி வருகிறது. துன் வீதி சம்பந்தன் தொடங்கி துன் ச.சாமிவேலு வரை இத்தொகுதியில் போட்டியிட்டுள்ளனர்.

2008ஆம் ஆண்டு தொடங்கி மஇகா இத்தொகுதியில் வெற்றி பெறவில்லை.

எனவே சுங்கை சிப்புட் தொகுதியில் வெற்றி பெறும் கட்சிக்கு விட்டுத்தர வேண்டுமென அத்தொகுதி அம்னோ புத்ரி தலைவி நோராஸூரா கூறியிருந்தார்.

இந்நிலையில் அவரின் இந்தக் கூற்று ஏற்புடையதல்ல. சுங்கை சிப்புட்டில் மஇகா தொடர்ந்து வெற்றி பெறவில்லை என்பதால் அத்தொகுதியை விட்டுத்தர வேண்டுமென்று அவர் கூறியிருக்கின்றார். ஒவ்வொரு காலகட்டத்திலும் தொகுதிகள் கோருவது சகஜம்தான்.

ஆனால் இப்போதுள்ள சுழ்நிலையில் இன அடிப்படையில் தொகுதிகளில் (தேர்தலில்) வெற்றி பெற முடியாது.

அப்படிப் பா

 

ர்த்தால் அம்னோ தொடர்ந்து தோல்வி கண்டு வந்த தொகுதிகளை மஇகாவும் கோரலாம் அல்லவா? இப்போதைய சுழ்நிலையில் இதுபோன்ற வாதங்கள் தேவையற்ற குழப்பங்களை ஏற்படுத்தும். 

இன்னும் சொல்லப்போனால் முன்பு நாட்டில் குறைந்த எண்ணிக்கையைக் கொண்ட இந்திய சமுதாயத்திற்கு அதிக கட்சிகள் உள்ளன என விமர்சனம் எழுந்தன. ஆனால் தற்போது மலாய் சமூகத்திற்கும் பல கட்சிகள் உருவாகியுள்ளன. எனவே எதையும் சிந்தித்துப் பேசவேண்டும்.

அதிலும் மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ ச. விக்னேஸ்வரன் சீங்கை சிப்புட் தொகுதியில் களமிறங்கி தொடர்ந்து சிறந்த முறையில் பணியாற்றி வருகிறார் என்பதனையும் அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என நேற்றுமஇகா தலைமையகத்தில் நடைபெற்ற  செய்தியாளர் சந்திப்புக் கூட்டத்தில் அவர் குறிப்பிட்டார்.

எஸ்.வெங்கடேஷ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here