அரசாங்க அலுவலகங்கள் முழுமையாக இயங்கும்

 

புத்ராஜெயா-
இன்று தொடங்கி ஜூன் 7ஆம் தேதி வரை எம்சிஓ அமல்படுத்தப்படும் காலகட்டத்தில் அரசாங்க அலுவலகங்கள் தொடர்ந்து முழுமையாகச் செயல்படும் என்று அரசாங்கத் தலைமைச் செயலாளர் முகமட் ஜுக்கி அலி கூறினார்.

இந்த எம்சிஓ உத்தரவால் அரசாங்கச் சேவைகளில் எந்தப் பாதிப்பும் வராது என்று அவர் உறுதியளித்தார்.

அரசாங்க அலுவலகங்கள் முழுமையாக இயங்குவதை அந்தந்தத் துறைகளின் தலைவர்கள் உறுதிப்படுத்த வேண்டும் என்று அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டார்.

அலுவலகங்களுக்கு வரத் தேவையில்லாத அதிகாரிகள் நிர்ணயிக்கப்பட்ட விதிமுறைகளுக்கு ஏற்ப வீட்டில் இருந்தே வேலை செய்ய வேண்டும் என்று பணிக்கப்பட்டனர் என்றும் அவர் சொன்னார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here