நியூயார்க் நகரை போன்ற 4 மடங்கு அளவு கொண்ட பனிபாறை உடைந்தது

நியூயார்க் நகரை போல் 4 மடங்கு அளவுக் கொண்ட பனிப்பாறை அண்டார்ட்டிகா  கடல் பகுதியில் விழுந்துள்ளது.   உலகின் மிகப்பெரிய பனிப்பாறையான ரோன் ( Ronne) லிருந்து  A-76 உடைந்துள்ளதாக ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் (ESA)  அண்மையில் தெரிவித்துள்ளது.

மேலும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் உருவாகி இருக்கும் மிகப்பெரிய பனிபாறைகள் விழும்போது அதன் அடியில் இருக்கும் கிருமிகளால் தொற்று ஏற்படவும் வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இப்பனிப்பாறை ஏறத்தாழ 170 கிலோமீட்டர் (105 மைல்) நீளமும் 25 கிலோமீட்டர் (15.5 மைல்) அகலமும் கொண்டது. இது ஸ்பெயினின் தீவான மஜோர்காவை விட சற்று பெரியதாக இருப்பதாக ESA மேலும் தெரிவித்துள்ளது.

பனிப்படுகைகளிலிருந்து பனிப்பாறைகள் உடைவது என்பது இயற்கை சுழற்சியின் ஒரு பகுதியாகும். ஆயினும் இயற்கை முறையில் உடையும் போது பனி படுகைகள் பனி பாறைகளை முறையான இடைவெளியில் உடைக்கிறது. அது உருகியதும், புதிய பனிப்பாறை கடல் மட்ட உயர்வுக்கு வழிவகுக்காது.

ஏனென்றால் அது மிதக்கும் பனி படுகையின் ஒரு பகுதியாக இருந்தது. உதாரணமாக உருகும் பனிக்கட்டி உங்கள் கண்ணாடியில் உள்ள பானத்தின் அளவை அதிகரிக்காது.

விஞ்ஞானிகள் இந்த உடைவிற்கு குறிப்பிட்ட காலநிலை மாற்றம் காரணமில்லை. அதற்கு பதிலாக இது இப்பகுதியில் இயற்கையான சுழற்சியின் ஒரு பகுதி என்று நம்புகிறார்கள்.

தரையில் உள்ள பனிப்பாறைகள், மிதக்கும் பனிக்கட்டிகளிலிருந்து வேறுபடுகின்றன. நிலத்தில் உள்ள பனிப்பாறைகள் உடைந்து உருகும்போது உலக கடல் மட்டத்தை உயர்த்தும். அண்டார்டிகாவின் முழு பனிக்கட்டியும் உருகினால், அது கடல் மட்டத்தை ஏறத்தாழ 190 அடி உயர்த்தக்கூடும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here