கோலாலம்பூர்: இரண்டு எல்ஆர்டி ரயில்கள் நேற்று (மே 24) இரவு ஏற்பட்ட விபத்தில் பாதிக்கப்பட்ட 65 பேர் கோலாலம்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
29 ஆண்கள் மற்றும் 36 பெண்கள், அனைத்து பயணிகளும் இன்னும் பல்வேறு காயங்களுக்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக டாங் வாங்கி ஒ.சி.பி.டி உதவி ஆணையர் முகமட் ஜைனல் அப்துல்லா தெரிவித்தார்.
பாதிக்கப்பட்டவர்களில் 59 பேர் உள்ளூர்வாசிகள். ஆறு பேர் வெளிநாட்டினர் என்று அவர் செவ்வாய்க்கிழமை (மே 25) தெரிவித்தார்.
எல்.ஆர்.டி கிளானா ஜெயா பாதையில் இரண்டு ரயில்கள் கே.எல்.சி.சி நிலையம் அருகே சுரங்கப்பாதையில் மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
47 பயணிகள் பலத்த காயம் அடைந்ததாகவும், 166 பேருக்கு சிறு காயங்கள் ஏற்பட்டதாகவும் ஏ.சி.பி முகமட் ஜைனல் தெரிவித்திருந்தார்.
இந்த சம்பவத்தின் பல வீடியோக்களும் படங்களும் சமூக ஊடகங்கள் மற்றும் வாட்ஸ்அப்பில் பரவி வருகின்றன.
1998 ஆம் ஆண்டில் திறக்கப்பட்டபோது மலேசியாவில் முதல் முழுமையான தானியங்கி எல்ஆர்டி கிளானா ஜெயா பாதையாகும். 37 நிலையங்களுடன், கிளானா ஜெயா பாதை மலேசியாவின் பரபரப்பான மெட்ரோ பாதையாகும். இது கோவிட் -19 தொற்றுநோய்க்கு முன்பு சராசரியாக 300,000 பயணிகள் பயணிக்கும் தளமாக அது விளங்கியது.