2 வார முழு எம்சிஓ; பிரெஸ்மா வரவேற்கும் அதே நேரம் வர்த்தகர்களின் பிரச்சினையை அரசாங்கம் கவனித்து கொள்ள வேண்டும்

நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கோவிட் தொற்று காரணமாக அரசாங்கம் ஜூன் 1 ஆம் முதல் 14 ஆம் தேதி வரை  2 வாரங்களுக்கு முழு நடமாட்டு கட்டுப்பாட்டு ஆணை (எம்சிஓ) அமல்படுத்தி இருப்பது வரவேற்கதக்கது என்று பிரெஸ்மா தலைவர் டத்தோ அலி மாஜு தெரிவித்தார். இந்த 2 வாரத்தில் கோவிட் தொற்று குறைய வேண்டும் என்பது அனைவரின் ஆவலாக இருக்கிறது என்றார்.

கோவிட் தொற்று கடந்தாண்டு ஆரம்பத்தில் இருந்து பல முறை முழு  எம்சிஓ மற்றும் இஎம்சிஓ அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் வர்த்தகர்களாகிய நாங்கள் பல பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகிறோம். எங்களின் வியாபாரம் 80 விழுக்காட்டு வரை வியாபாரம் சரிவு கண்டுள்ளது.

ஆனால் கடை வாடகை, பணியாளர்களின் உணவு, தங்குமிடம், சம்பளம் ஆகியவை வழக்கம் போல் வழங்க வேண்டியுள்ளது.  அதனால் எங்களின் நிலையை அரசாங்கம் கவனத்தில் கொண்டு வங்கி கடன் செலுத்துவதில் கால அவகாசம் மற்றும் கடை வாடகை உள்ளிட்ட செலவுகளை சமாளிக்க மானியம் (நிதியுதவி) வழங்க வேண்டும் என்ற வேண்டுகோளை டத்தோ அலி மாஜு அரசாங்கத்திடம் கோரிக்கையை முன் வைத்தார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here