சளிபிடித்த 3 வயது குழந்தை தனியே சுகாதார மையத்துக்கு சென்ற வியப்பளிக்கும் சம்பவம்!

இந்தியா: தனக்கு சளி இருப்பதாக உணர்ந்த மூன்று வயது சிறுமி, யாருடைய உதவியும் இன்றி தனியாகவே அருகிலுள்ள சுகாதார மையத்திற்குச் சென்று, உடல் பரிசோதனை செய்துகொண்ட சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

இந்தியாவின் நாகலாந்து மாநிலத்தை சேர்ந்த 3 வயது சிறுமியான லிபாவி. இவருக்கு கடந்த ஜூன் 2 ஆம் தேதி முதல் சளி இருந்துள்ளது. இச் சிறுமியின் பெற்றோர் வேலைக்கு சென்று விட்டதால், முற்போக்காக சிந்தித்து தனது வீட்டுக்கு அருகேயுள்ள ஆரம்ப சுகாதார மையத்துக்கு சென்றுள்ளார்.

பெரியவர்களே கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளவும் உடல் பரிசோதனை செய்ய தயக்கம் காட்டியும் வருகின்ற நிலையில், இச் சிறுமியின் துணிச்சலான செயல் அனைவராலும் பாராட்டப்பட்டு வருகின்றது. மேலும் வயது என்பது ஒரு எண் மட்டுமே என்பதை இக் குழந்தை நிரூபித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here