சிங்கப்பூரில் 3 மலேசியர்களுக்கு கத்திக் குத்து!!!

சிங்கப்பூர் (ஜூன் 7) : சிங்கப்பூரின் புக்கிட் மேராவிலுள்ள வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடு ஒன்றில் நான்கு பேரைக் கத்தியால் தாக்கியதாகக் கூறப்­படும் 48 வயது ஆடவர் ஒருவரை சிங்கப்பூர் போலீஸ் நேற்று கைது செய்துள்ளது.

காயமடைந்த அந்த நால்வரில் மூவர் மலேசியர்கள். இன்னும் ஒருவர் வியட்னாம் நாட்டவர் ஆவார். ஆரம்பகட்ட விசாரணையில் சந்தேகநபர் போதைப்பொருள் பழக்கமுடையவர் என்றும் அவர் மிகுந்த மனநல பாதிப்புக்குள்ளானவர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

எண் 2, புக்­கிட் மேரா சாலையில் உள்ள வீவக வீட்டில் நேற்றுக் காலை 6.06 மணிக்கு இத்தாக்குதல் நடைபெற்றதாக போலீஸ் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்ததுடன் இச்சம்பவத்தில் காயமடைந்தவர்கள் 18, 24 வயதான இரண்டு மலேசிய ஆடவர்கள் 39 வயதான மலேசியபெண் ஒருவரும் 59 வயதான வியட்னாமிய பெண்ணும் அடங்குவர்.

அவர்களைக் கத்தியால் தாக்கியதாகக் கூறப்படும் 48 வயது ஆடவர் அவர்களுக்கு முன்பின் தெரியாதவர் என நம்பப்படுவதுடன் இந்தத் தாக்குதலில் அவர் தனியாக ஈடுபட்டதாகவும் அவர் போதைப்பொருள் உட்கொண்டிருந்ததாகவும் ஆபத்தான ஆயுதம் கொண்டு வேண்டுமென்றே கடுமையான காயத்தினை விளைவிக்க முயன்றார் என்றும் இச் சம்பவம் நிகழ்ந்த இடத்­தல் ஒரு கத்தி, ஒரு வெட்டுக்கத்தி, இரு பேனா கத்திகள், போதைப்பொருள் எனச் சந்தேகிக்கப்படும் பொருட்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டதாகவும் இச் சம்பவத்தில் காயமடைந்தவர்கள் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும்  சிங்கப்பூர் போலீஸ் தெரிவித்தது.

சம்பவத்தில் காயமடைந்தவர்கள் வீட்டில் தூங்கிக்கொண்டு இருந்தபோது சந்தேக நபர் வீட்டிற்குள் நுழைந்து பெண்கள் இருவரைக் கத்தியால் தாக்கியதாகவும் அப்போது வீட்டில் இருந்த ஆண்கள் இருவர், அந்த ஆடவரை மடக்கிப் பிடிக்க முற்பட்ட பொழுது அவர்களுக்கும் காயம் ஏற்பட்டதாக நம்பப்படுகிறது.

இந்நிலையில், தாக்குதலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் சந்தேக நபருக்குக் குற்றப் பின்னணி உள்ளது என்றும் 1991 முதல், பல்வேறு போதைப்பொருள் குற்றங்களை அவர் புரிந்ததாக போலிஸ் தெரிவித்தது.

மேலும் வீட்டின் மற்றோர் அறையில் தூங்கிக்கொண்டிருந்த 31 வயது ஆடவர் ஒருவர், இந்தக் கலாட்டாவால் கண்விழித்து வீட்டிலிருந்து தப்பித்து சுற்றுக்காவல் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் அதிகாரிகளிடமிருந்து உதவி பெற அவர் முற்பட்டார் என்றும் அவருக்குக் காயம் ஏற்படவில்லை என்றும் போலீஸ் தெரிவித்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here