இணையத்தில் வறுத்த கோழி வாங்கிய பெண்ணுக்கு, துடைக்கும் துண்டு (towel) அனுப்பிய உணவகம்!!

பிலிப்பைன்ஸ் : இணையத்தில் உணவு வாங்கிய பெண்ணுக்கு மிக சோகமான சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது.

ஆசை ஆசையாக வறுத்த கோழி ஆர்டர் செய்த பெண்ணுக்கு வறுத்த துடைக்கும் துண்டு (towel) கிடைத்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள பிரபல உணவகம் ஒன்றில் அலிக் பெரெஸ் என்பவர் தனது மகனுக்கு வறுத்த கோழி ஆர்டர் செய்துள்ளார்.

முதலில் அந்த உணவு பார்ப்பதற்கு வறுத்த கோழி போன்றே இருந்து உள்ளது.அதன் நிறம், தன்மை அனைத்தும் கோழியை போன்றே இருந்துள்ளது. ஆனால் அதனை தன் மகன் கடித்து சாப்பிட முடியவில்லை.

அது கடினமாக இருந்ததால் அதனை கைகளால் சாப்பிடலாம் என்றாலும் முடியவில்லை. அதனை வெட்டவும் முடியவில்லை. இறுதியாக தான் அது வறுத்த கோழி இல்லை அது ஒரு துண்டு (towel) என்பது அவர்களுக்கு தெரியவந்துள்ளது.

இந்த அதிர்ச்சி சம்பவத்தை வீடியோவாக அந்த பெண் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்த வீடியோ இணையத்தில் வைரலானதை அடுத்து பிரபல துரித உணவகம் தனது கிளையை தற்காலிகமாக மூடி உள்ளதுடன்
விற்பனை நிலையங்களில் இதுப்போன்ற சம்பவம் மீண்டும் நடைபெறாமல் இருப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

வாடிக்கையாளரிடம் இருந்து வந்த புகாரை அடுத்து, அவ்வுணவகம் அக்கடை ஊழியர்களிடம் விசாரணையும் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here