கோவிட் தொற்றினால் பாதிக்கபட்டு இல்லம் திரும்பியவர்களுக்கு 12 வாரத்திற்குள் Long Covid வர வாய்ப்பு; சுகாதார அமைச்சு தகவல்

பெட்டாலிங் ஜெயா: கோவிட் -19 தொற்றுக்கு பின்னர் மருத்துவமனையில் இருந்து இல்லம் திரும்பினால் அவர்கள் முழுமையாக குணமடைந்து விட்டனர் என்று அர்த்தம் கொள்ள கூடாது.  ஆயிரத்துக்கும் மேற்பட்ட நோயாளிகளைப் பற்றிய ஆராய்ச்சியில்  4 ஆம் வகை மற்றும் 5 கோவிட் -19 நோயாளிகளில் 66% பேர் பிந்தைய கோவிட் நோய்க்குறிகளால் பாதிக்கப்படுகின்றனர் என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

லாங் கோவிட் (Long Covid) என்றும் அழைக்கப்படும் இந்த நோய்க்குறி, வைரஸிலிருந்து மீண்டவர்கள் தொடர்ந்து 12 வாரங்கள் அல்லது அதற்கு மேற்பட்ட அறிகுறிகளைக் காண்பிக்கும். பொதுவாக, நாட்டில் பெரும்பான்மையான கோவிட் -19 நோயாளிகள் (அனைத்து வகைகளிலும்) முழுமையாக குணமடைவார்கள் என்று மருத்துவ தகவல்கள் காட்டுகின்றன.

இருப்பினும் போஸ்ட் கோவிட் நோய்க்குறியால் பாதிக்கப்பட்டவர்கள் ஒரு சிலரே” என்று சுகாதார தலைமை இயக்குநர்  டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார். நீண்ட கோவிட் அறிகுறிகளில் சோர்வு, மூச்சுத் திணறல், தூக்கமின்மை, இருமல் மற்றும் பதட்டம் ஆகியவை அடங்கும்.

இப்போதைக்கு, நூர் ஹிஷாம் நோயாளிகளுக்கு இருக்கும் அறிகுறிகளின் அடிப்படையில் வழங்கப்படும் சிகிச்சை அளிக்கப்படும் என்றார். லாங் கோவிட்டின் தாக்கத்தை நன்கு புரிந்துகொள்வதற்கும் அடையாளம் காண்பதற்கும் அவர் சேர்த்த மருத்துவ ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here